தமிழகத்தில் புதிய சிறுதானிய சிறப்பு மண்டலம்! துவரை சாகுபடி குறித்தும் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சிறுதானியங்கள் குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இன்றைய தினம் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். திருக்குறள் உள்ளிட்ட பண்டை தமிழ் இலக்கியங்கள் குறித்து மேற்கோள் காட்டி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது வேளாண் பட்ஜெட்டை தொடங்கினார்.

கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் தவழும் குழந்தையாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்த அந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் நடந்து செல்லும் குழந்தையாக இருக்கிறது என்றும் அடுத்த ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட் ஓடும் குழந்தையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 86 திட்டங்களில் 80 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் என்றும் 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
Recommended Video
முதலமைச்சர் தலைமையில் சிறுதானிய திருவிழா தொடர்ந்து நடத்தப்படும் என்றும் சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications