பொறியியல் படிப்பில் சேர அதிக ஆர்வம்! இந்த வருடம் எத்தனை பேர் தெரியுமா? அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்
சென்னை : இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர் எனவும், 4வது சுற்றிலும் பொறியியல் படிப்புகளில் அதிகமான மாணவர்கள் சேர உள்ளனர் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது பொறியியல் செயற்கைக்கான மூன்றாவது கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் நான்காவது கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
நான்காவது கட்ட கலந்தாய்வு 14ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 89 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு வெறும் 80 ஆயிரம் பேர் தான் சேர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் கல்லூரி
இந்நிலையில் இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பொறியியல் கலந்தாய்வு 4வது சுற்று வருகிற 14ஆம் தேதி தான் நிறைவடைகிறது. இதுவரையில் 89,585 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். சென்ற ஆண்டு 80,383 பேர் சேர்ந்து இருந்தனர். 10 ஆயிரம் பேர் அதிகமாக சேர்ந்து இருக்கிறார்கள்.

அமைச்சர் பொன்முடி
4வது சுற்றிலும் மாணவர்கள் சேர உள்ளனர். அதன் பின்னர் துணை கலந்தாய்வு காலி இடங்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு அதிக மாணவர்கள் சேர்க்கப்படுகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் 4000 பேர் தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் இதற்கான பணி தொடங்கும்.

இடமாறுதல் கலந்தாய்வு
கெஸ்ட் விரிவுரையாளர் தேர்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 5 வருடமாக நடைபெறாமல் இருந்த கவுன்சிலிங் தற்போது ஆன்லைன் வழியாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்
5,408 உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 3 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன. விரும்பும் இடங்களை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் காலி இடங்களுக்கு மாறுதல் வழங்கப்படும்" என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications