காந்தி மண்டபத்தை சுத்தம் பண்ணலயா? ஆளுநர் ரவிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
சென்னை: காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறும் குற்றச்சாட்டு தவறானது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். காந்தி மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை சேவை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.

காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்த ஆளுநர்ஆர்.என்.ரவி, வளாகத்தில் ஆங்காங்கே கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாத்மா காந்தி தூய்மையையும் வலியுறுத்தியவர். தூய்மை என்பது தெய்வீகமானது. அதனை தினசரி பழக்கமாக நாம் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். நம் நாட்டில் பொது இடங்களில் குப்பை கொட்டும்போக்கு உள்ளது. இது நாகரீக சமுதாயத்துக்கு நல்லதல்ல. பொது இடங்களில் தூய்மையின்மை என்பதுபல நோய்களை உருவாக்கும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் தான்.
காந்தி மண்டபத்தில் கூட குப்பை குவிந்து கிடக்கிறது. குறிப்பாக ஆங்காங்கே மதுபாட்டிகள் போன்றவையும் கிடக்கின்றன. இது மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரானது. இதை பார்க்குபோது மிகவும் வருத்தமாக உள்ளது. எனவே பொது இடங்களில் குப்பை கொட்டக்கூடாது. அது அனைவருக்குமானது." எனத் தெரிவித்திருந்தார்.
காந்தி மண்டபத்தில் குப்பைகள் கிடப்பதாகவும், காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் ஆளுநர் ரவி வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆளுநரின் குற்றச்சாட்டு தவறானது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறும் குற்றச்சாட்டு தவறானது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, காந்தி மண்டபம், கடற்கரை சாலைகளில் உள்ள முக்கிய இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications