ஒரு கரும்பின் விலை ரூ.33! அமைச்சர் சக்கரபாணி சொன்ன தகவல்! ‘இந்த’ தேதிகளில் பொங்கல் பரிசு கிடைக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பொங்கலுக்கு நேரடியாக விவசாயிகளிடம் சென்று கரும்பு கொள்முதல் செய்யப்படும் எனவும், ஒரு கரும்பின் விலை 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை கொண்ட பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம், முழு கரும்பு ஆகியவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 அமைச்சர் சக்கரபாணி

அமைச்சர் சக்கரபாணி

இந்நிலையில் பொங்கலுக்கு வழங்கப்படும் ஒரு கரும்பின் விலை 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கான்ரான்ஸ்மித் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பொங்கல் பொருட்கள் விநியோகம் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை உணவு மற்றும் உணவுப் பொருள் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் எவ்வித குறைபாடும் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்," தைப் பொங்கல் திருநாளை ஒட்டி தமிழகத்தில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவற்றை தமிழக அரசு வழங்குகிறது. மாதந்தோறும் நியாய விலை கடைகளில் தரப்படும் பொருட்கள் அனைத்து மாவட்டத்திற்கும் 60% அளவுக்கு சென்றுவிட்டது.

கரும்பு

கரும்பு

21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை கடந்த வருடம் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கியது. இரண்டு இடங்களில் மட்டுமே பொருள் தரமாக இல்லை என குற்றச்சாட்டு வந்திருந்தது. மீதம் உள்ள இடங்களில் எந்த குறைபாடுகளும், புகார்களும் வரவில்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய 17 மாவட்டங்களில் கரும்புகள் விளைவிக்கப்படுகிறது.

33 ரூபாய்

33 ரூபாய்


அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைத்து இருக்கிறோம். அவர்கள் நேரடியாக விவசாயிகள் இடம் சென்று கரும்புகள் கொள்முதல் செய்யப்படும், மேலும் ஒரு கரும்பின் விலை 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 19269 இலங்கைத் தமிழர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்" என்றார்.

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர்

தொடர்ந்து பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்," ஆயிரம் ரூபாய் பணத்தை பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நாங்கள் நீதிமன்றத்தில் அதற்குரிய விளக்கங்கள் அளித்திருக்கிறோம். வருகிற 9 ஆம் தேதி தமிழக முதல்வர் பொதுமக்களிடம் வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை ஆரம்பித்து வைக்கிறார் , மேலும் 10, 11,12 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும். 13ஆம் தேதி நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும். அன்றும் பரிசு தொகுப்பு இந்த மூன்று தேதிகளில் வாங்காதவர்களுக்கு வழங்கப்படும்" என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+