• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்தி மொழியை காகத்தோடு ஒப்பீடு... ஆளுநரை மீது சாடல்... அமைச்சர் சேகர்பாபு ஆக்ரோஷம்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்தி மொழியை காகத்தோடும், காகத்தின் எச்சத்தை இந்தி திணிப்போடும் ஒப்பிட்டு அமைச்சர் சேகர்பாபு பேசினார். மேலும் ஆளுநரையும் அவர் விமர்சனம் செய்தார்.

  சென்னை: காகம் எச்சத்தோடு இந்தி திணிப்பு ஒப்பீடு: அமைச்சர் சேகர்பாபு பேச்சு!

  தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

  ம.பி.யில் கொடூரம்.. உணவுக்கு பணம் கேட்ட 6 வயது சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற போலீஸ்காரர் ம.பி.யில் கொடூரம்.. உணவுக்கு பணம் கேட்ட 6 வயது சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற போலீஸ்காரர்

  வடசென்னை கொருக்குப்பேட்டையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:

  363 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

  363 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

  தமிழகத்தில் திமுக பதவியேற்றதில் இருந்து என்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்கள் என எதிர்கட்சிகள் கேள்விகள் கேட்கின்றன. அவர்களுக்கு பதில் அளிக்கிறேன். ஐந்தாண்டு நிறைவடைவதற்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 563 வாக்குறுதிகளில் 363 வாக்குறுதிகள் முதல் ஓராண்டிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

  காகத்தோடு இந்தி ஒப்பீடு

  காகத்தோடு இந்தி ஒப்பீடு

  தமிழகத்தில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநரால் இந்தி திணிப்பு கையில் எடுக்கப்பட்டுள்ளது. காகம் தலைக்குமேல் எச்சம் இடுவதையே எதிர்க்கிறோமே தவிர காகத்தை எதிர்க்கவில்லை. இதன்மூலம் இந்தியை காகத்தோடும் இந்தி திணிப்பை காகத்தின் எச்சத்தோடும் அமைச்சர் ஒப்பிட்டுள்ளார். மேலும் நாங்கள் ஏற்றும் தீர்மானத்தை கவர்னர் ஏற்காத போது நாங்கள் ஏன் அவரை ஏற்க வேண்டும்.

  முதல்வர் கரங்களை வலுப்படுத்துவோம்

  முதல்வர் கரங்களை வலுப்படுத்துவோம்

  தர்மபுரி ஆதினத்தை கையில் எடுத்தது இந்து விரோத ஆட்சியாக காட்ட முற்ப்பட்ட எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் தர்மபுரி ஆதினமே இது ஆன்மீக ஆட்சிஎன்று கூறியிருக்கிறார். தமிழகத்தை மத்திய துணை கண்டத்திலேயே முதன்மை மாநிலமாக மாற்ற முற்படும் முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்துவோம்'' என்றார்.

   தயாநிதி மாறன் பேச்சு

  தயாநிதி மாறன் பேச்சு

  இந்த கூட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசினார். அவர் பேசியதாவது: கொரானாவிலும் மழையிலும் உங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற முதல்வர் தான் முக ஸ்டாலின். காலில் விழுந்தவர்கள் இருந்த இடத்தில் கம்பீரமாக வந்தவர் முதல்வர். பதவியேற்ற உடனடியாக விவசாயகடனையும், நகைக்கடன் 1000 கோடியும் தள்ளுபடி செய்துள்ளார்.

  குஜராத்தியர்களை தவிர...

  குஜராத்தியர்களை தவிர...

  பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என உணர்ந்து கல்வியில் முன்னேற்றம் காண செய்கிறார். பெட்ரோல் டீசல் விலையை பற்றி கவலைப்படாமல் விதவிதமான ஆடைகளை அணிந்து குஜராத்தியர்களை தவிர வேறு யாரும் தொழில் செய்ய முடியாது என்பதை போல் மோடி செயல்பட்டு வருகிறார்

  எனக்கு இந்தி தெரியாது

  எனக்கு இந்தி தெரியாது

  ஏழை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கியதே திராவிட மாடல் அரசு. தகைசால் பள்ளிகளை 150கோடி செலவில் 25 மாநகராட்சிகளில் தொடங்கியது. பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கனவை இந்த ஆட்சியில் சேகர்பாபு அனைத்து ஜாதியினரும் அர்ச்கராகலாம் என்று சட்டமாக்கியது மட்டுமல்லாமல் தமிழக கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என மாற்றியுள்ளார். எனக்கு இந்தி தெரியாது. ஆனால் இந்தியாவை பற்றி தெரியும் என்பதாலையே கருணாநிதி என்னை மத்திய அமைச்சராக்கினார்'' என்றார்.

  English summary
  DMK has been accusing the central government of imposing the Hindi language, now Minister Sekar babu has compared the Hindi language to crow and he also criticized the governor.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X