ஸ்காட்லாந்து அப்பறம் லண்டன்.! அதிகாரிகளுடன் பறக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி! என்ன காரணம் தெரியுமா?
சென்னை: 5 நாள் அரசு முறை பயணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து, லண்டன் ஆகிய நாடுகளுக்கு கடலில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய வெளிநாடு பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கும் முன்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய்க்கு அரசுமுறைப் பயணம் செய்து பல்வேறு முதலீடுகளை ஈர்க்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 25 நாட்கள் அமெரிக்கா கனடா சிங்கப்பூர் ஆஸ்திரேலியா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் பத்தாயிரம் கோடி அளவில் முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து தற்போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளி நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

மின்னகத்தில் ஆய்வு
கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி முதலமைச்சர் மின்னகம் நுகர்வோர் சேவையை தொடங்கி வைக்கப்பட்டது. மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் அமைந்துள்ள மின்னகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி," தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன . 9.11 லட்சம் புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் அழைப்புகள் வந்தாலும், அதை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

உடனடி தீர்வு
சமூக வலைத்தளங்களின் மூலம் வரும் புகார்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் புகார்கள் வந்தாலும் அதை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட சென்னை அனல் மின் நிலையம் மூன்றாம் நிலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

வெளிநாட்டு அரசு முறை பயணம்
தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்காட்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 பேர் கொண்ட குழுவாக கடலில் காற்றாலை தயாரிக்கும் பணி தொடர்பாக இன்று வெளிநாடு செல்கிறோம்" என அவர் கூறினார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறை பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications