"அண்ணா.. நல்லா இருப்பேள்.. பார்சல் பண்ணுங்கோ".. அமைச்சருக்கு டிஆர்பி ராஜா வேண்டுகோள்.. "பாச ட்வீட்"
தங்கம் தென்னரசு டிஆர்பி ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை: மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதற்கு நன்றி தெரிவித்து பதில் ட்வீட் பதிவிட்டுள்ளார் டிஆர்பி ராஜா
டிஆர் பாலுவின் மகன் டிஆர்பி ராஜா, மன்னார்குடியில் பல்வேறு செயல்திட்டங்களை அமல்படுத்தி வருபவர்.. அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே, தொகுதி பிரச்சனைகளை கையில் எடுத்து, அதை களைய நிறைய முன்னெடுப்புகளை எடுத்தவர்.
குறிப்பாக, சட்டமன்றம் குறித்து தெரிந்துகொள்ளவும், தொகுதியில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகாரளிக்கவும் தொலைபேசி வாயிலாக புதுமுயற்சியைச் செயல்படுத்தியவர் ராஜா... இது மக்களிடம் பரவலான வரவேற்பை பெற்றது.

பதவி
தற்போது நடந்து முடிந்த தேர்தலில், இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதவி எதுவும் தரப்படவில்லை.. ஆனால், முதல்வரின் ஸ்டாலின் நடவடிக்கைகளை விடாமல் பாராட்டி கொண்டிருப்பவர். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் டிஆர்பி ராஜா பேசும்போது, 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து சிறப்பான துவக்க ஆட்டக்காரராக முதலமைச்சர் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தவர்.

விழா
இந்நிலையில், இவருக்கு 2 நாளைக்கு முன்பு பிறந்த நாள் விழாவை, இவரது ஆதரவாளர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள்.. பல்வேறு தலைவர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.. அந்த வகையில், தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ட்வீட் போட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஒரு போட்டோவும் அதில் இணைத்துள்ளார்.

போட்டோ
அதில், மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன், டிஆர்பி ராஜா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் உள்ளனர்.. இந்த போட்டோவுடன், அன்புத் தம்பி @TRBRajaa க்குச் சற்று தாமதமான ஆனால் இனிமையான பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்வாங்கு வாழ்க! என்று தங்கம் தென்னரசு வாழ்த்து சொல்லி உள்ளார்..

டிஆர்பி ராஜா
இந்த வாழ்த்துக்கு, டிஆர்பி ராஜா பதிலளிக்கும்போது, அண்ணா 🙏🏾 What a blessed moment that was with #Thalaivar #Kalaignar😍Thank you thank you 😇🙏🏾🙏🏾🙏🏾 Birthday gifta #delta க்கு ஒரு #MegaFoodPark parcel பண்ணுங்கோ 😇
நன்னா இருப்பேள் 😊 என்று பதில் தெரிவித்து நன்றி சொல்லி உள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications