சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தன்னடக்கம் அதிகம்.. சட்டசபையில் தங்கம் தென்னரசுவை பாராட்டிய ஓபிஎஸ்.. அவையில் கரவொலி!

Google Oneindia Tamil News

சென்னை: பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் காலம் வரை ழ எனும் எழுத்து புழக்கத்தில் உள்ளது என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது எம்எல்ஏக்கள் விவாதம் நடத்தினர். அப்போது அவர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார்.

அவர் கூறுகையில், தமிழ் மொழியின் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சொல்லைத்தான் நாம் இன்று வரை பயன்படுத்தி வருகிறோம். தமிழ் தனித்து இயங்கக் கூடிய மொழி.

ஓ இதுதான் மேட்டரா? இளையராஜாவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி? டெல்லி களமிறக்கும் பிளான்! இப்படி ஒரு ரூட்டா? ஓ இதுதான் மேட்டரா? இளையராஜாவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி? டெல்லி களமிறக்கும் பிளான்! இப்படி ஒரு ரூட்டா?

உதாரணம்

உதாரணம்

உதாரணத்திற்கு ன் என்ற விகுதி அசோகனின் பிராமியில் கிடையாது. ஆனால் கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருள்களில் ஆதன் என்ற பெயர் உள்ளது. அதில் ன் வருகிறது. அசோகன் காலத்துக்கு முன்பே தமிழில் ன் எனும் எழுத்து இருந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது. அன்று கிடைத்த ன் எழுத்துதான் இன்றைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர் செல்வத்தின் பெயரில் வருகிறது.

முன்னவர் பெயர்

முன்னவர் பெயர்

அவை முன்னவர் பெயரும் ன் என்றே முடிகிறது (துரைமுருகன்). மேலும் முதல்வர் பெயரை உச்சரித்தாலும் ன் வருகிறது. இது தமிழின் சிறப்பு. தமிழில் பல எழுத்துகள் உள்ளன என்றாலும் ழ என்ற எழுத்து எந்த மொழியிலும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பெயரில் ழ எழுத்து வருகிறது.

தமிழின் பெருமை

தமிழின் பெருமை

ஆக "ழ" வாக இருந்தாலும் "ன்" ஆக இருந்தாலும் அவை தமிழின் பெருமையாக காணப்படுகின்றன. தமிழணங்கு என்ற பெயரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை ஆல்பம் உருவாக்கியுள்ளார். தமிழ்த்தாய் என்றாலே கலை வடிவமாகத்தான் நமக்குத் தோன்றும். புலியை முறத்தால் துரத்திய புறநானூற்றுத் தாய் போன்ற உருவத்தை வைத்து அவள் கையில் சூலாயுதத்தை கொடுத்து அதன் உச்சியில் ழ என தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் நெடுஞ்செழியன்

பாண்டியன் நெடுஞ்செழியன்

இதனால் பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்திலிருந்து ஏ.ஆர். ரகுமான் காலம் வரை ழ வருகிறது என்பதுதான் தமிழின் பெருமை என்றார் தங்கம் தென்னரசு. அதைத் தொடர்ந்து ஓபிஎஸ் பேசினார். அமைச்சர் தங்கம் தென்னரசு பெயரிலும் ன் எழுத்து வருவதை தன்னடக்கத்துக்காக இங்கு குறிப்பிடவில்லை. அந்த பெருமையை அவரும் பெற்றுள்ளார் என்றார். எப்போதும் தங்கம் தென்னரசுவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் காட்டமாக பதில் கொடுப்பதும், அதற்கு அவரும் உரிய விமர்சனத்தை முன் வைப்பதும் என இருந்த நிலையில் நேற்றைய தினம் ஓபிஎஸ் அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Thangam Thennarasu says about the tamil letter which is in practice from Pandiyan Nedunchezhiyan to A.R.Rahman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X