அடுத்த விக்கெட் காலி.. இபிஎஸ்ஸுக்கு தலைவலி.. பனையூர் நகரும் 5 மாஜி அமைச்சர்கள்.. விஜய் தந்த செக்மேட்
சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர். இன்று தவெகவில் இணைய போவதாக தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.. ஏற்கனவே 4 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஜம்ப் ஆன நிலையில், இன்று மேலும் 5 முக்கிய அதிமுக முகங்கள் தவெகவில் இணைய போகிறார்களாம்.. அந் 5 பேருமே முன்னாள் அமைச்சர்கள் என்பதால், அதிமுக கூடாரமே வெலவெலத்து கிடக்கிறது.
அதிமுகவில் மிக முக்கியமான முகங்களாக வலம் வந்த முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் பெஞ்சமின் ஆகிய 5 முக்கியத் தலைவர்களும் இன்று காலை 10 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்லவிருக்கிறார்களாம்.. அங்கு அவர்கள் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தங்களைத் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மெஜாரிட்டி கணக்கு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு நீங்கலாக 107 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாத சூழலில், கூட்டணி கணக்குகளை அடியோடு மாற்றி அமைத்தது.
தவெக தலைவர் ஜோசப் விஜய் விடுத்த ஆதரவு கரத்தை ஏற்று, திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய காங்கிரஸ், 2 அமைச்சர் பதவிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியோடு தவெக அரசில் கைகோர்த்தது.
இதனைத் தொடர்ந்து விசிக மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளும் தலா ஒரு அமைச்சர் பதவியைப் பெற்று ஆட்சியில் பங்கு வகிக்க, இடதுசாரிகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகின்றனர். இப்படிப் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமைந்த தவெக அரசு, தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்கப் பல்வேறு அரசியல் வியூகங்களைக் கையாண்ட விதம் தமிழகத்தையே உற்று நோக்க வைத்தது.
அமமுக எம்எல்ஏ காமராஜ்
ஆரம்பத்தில், அமமுக எம்எல்ஏ காமராஜ் கடத்தப்பட்டதாகவும், அவரிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி பேட்டி அளித்தபோது அரசியல் களம் பயங்கரமாக சூடானது. ஆனால், அதற்குள் முதலமைச்சர் விஜய், அதிமுகவில் தனிப் பிரிவாக செயல்பட்டு வந்த எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணியைச் சந்தித்துப் பேசினார்.
இதன் எதிரொலியாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், வேலுமணி மற்றும் சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்களும், அமமுகவின் காமராஜும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அவையைக் அதிரவைத்தனர். அதன் தொடர்ச்சியாக, அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு அதிகாரப்பூர்வமாகத் தவெகவில் இணைந்தனர்.
வேலுமணி அதிமுக
இந்த அடுத்தடுத்த அதிரடிகளால் நிலைகுலைந்து போன அதிமுக வட்டாரத்தில், இப்போது மீண்டும் ஒரு புதிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவளித்த எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில எம்எல்ஏக்கள்., திடீரென மீண்டும் தங்களது பழைய தலைவரான எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கே திரும்பிச் சென்று ஐக்கியமாகியுள்ளனர். இந்தத் திடீர் பல்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்த அதிருப்தி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் சிலர் மட்டும் இன்னும் தாய் கழகத்துக்கு திரும்பவில்லை. இவர்கள் 2 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையப் போகிறார்கள் என்ற பேச்சுக்கள் பரவலாக எழுந்த போதிலும், இப்போது அவர்கள் இருவரும் தங்களது சொந்த தொகுதிகளுக்குச் சென்று அங்கேயே முகாமிட்டு அமைதி காத்து வருகின்றனர்.
இப்படி அதிமுகவுக்குள் நடக்கும் உட்கட்சிப் பூசல்களும், அணி மாற்றங்களும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தவெகவின் "ஆபரேஷன்" மிகத் தீவிரமாகத் தொடர்வது தற்போதைய நிலவரங்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
5 முன்னாள் அமைச்சர்கள்
சமீபத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்தது எடப்பாடி தரப்புக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்னும் சில மிக முக்கிய, பரிச்சயமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாகத் தவெகவில் இணையப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அதிமுகவில் மிக முக்கியமான முகங்களாக வலம் வந்த முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் பெஞ்சமின் ஆகிய 5 முக்கியத் தலைவர்களும் இன்று காலை 10 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்லவிருக்கிறார்களாம்.. அங்கு அவர்கள் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தங்களைத் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தவெக பனையூர் பக்கம் நகரும் மாஜிக்கள்
முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி, மாவட்ட அளவில் அதிமுகவின் வலுவான தூண்களாக இருந்த முக்கிய நிர்வாகிகளும் தவெக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, அதிமுகவின் தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கோவிந்தசாமி மற்றும் சிவன் ஆகியோர் தலைமையில் மேலும் 5 முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் இன்று பனையூர் அலுவலகத்தில் விஜய்யைச் சந்தித்துத் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை மொத்தமாகப் பலவீனப்படுத்தும் தவெகவின் திட்டமா அல்லது தங்களின் ஆட்சியைத் தொய்வின்றி நகர்த்துவதற்கான முதலமைச்சரின் வியூகமா என்ற விவாதம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications