பொதுவாழ்வில் போற்றத்தக்கவர் பன்வாரிலால்... ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்;
''மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''

''தமிழகத்தின் மீதும் - தமிழக மக்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் அவர்கள் பொதுவாழ்வில் போற்றத்தக்க பணியாற்றியவர். அரசியலிலும் - நிர்வாகத்திலும் பழுத்த அனுபவம் கொண்ட அவர், நான் சந்தித்த நேரங்களில் எல்லாம் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவர்.''
''அவரது பொதுவாழ்வு மென்மேலும் சிறக்க - ஆரோக்கியத்துடனும், நலமுடனும் பல்லாண்டு வாழ்ந்து - தமிழகத்திற்கும், நம் நாட்டிற்கும் ஆற்றல்மிகுந்த சேவையாற்றிட வேண்டும் என்று இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.''
இவ்வாறு ஆளுநரை பாராட்டி ஸ்டாலின் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறி வரும் சூழலில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றால், அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் பன்வாரி லால் புரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications