2016 இலேயே கருணாநிதி சொன்னாரு.. ஆனால் முடியலை.. இப்ப ரொம்ப மகிழ்வாக இருக்கு.. ஸ்டாலின் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்திற்கு பெண்கள் கொடுத்த வரவேற்பை புள்ளிவிவரங்களுடன் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பெரும் மகிழ்ச்சி அடைந்தாராம்.

முதல்வர் பதவியேற்றதும் மகளிருக்கான இலவச பேருந்து இயக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார் ஸ்டாலின். தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

இது ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள் அன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர்களுக்கும் இந்த இலவச பயண திட்டத்தை விரிவுப்படுத்தினார் ஸ்டாலின்.

திட்டம்

திட்டம்

இந்த திட்டம் அதன் பயனாளிகள் மட்டும் அல்லாது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம் குறித்து உயரதிகாரிகளிடம் விசாரித்திருக்கிறார் ஸ்டாலின். அப்போது, திட்டம் துவங்கியதிலிருந்து இதுவரை தமிழகம் முழுவதும் மகளிருக்கான எத்தனை இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன?

பெண்ணுக்கு எவ்வளவு மிச்சம்

பெண்ணுக்கு எவ்வளவு மிச்சம்

அதில் எத்தனை பெண்கள் பயணித்துள்ளனர் ? அதன் மூலம் மாதம் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பணம் மிச்சமாகியுள்ளது ? பெண்களின் மன உணர்வுகள் என்ன ? என்பது குறித்தெல்லாம் விரிவாக பதில் சொல்லியுள்ளனர் அதிகாரிகள்.

தொழிலாளிகள்

தொழிலாளிகள்

இதனைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார் ஸ்டாலின். "அன்றாடம் உழைக்கும் பெண்கள், கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் மனம் மகிழும்படி ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று 2016 தேர்தல் காலக்கட்டத்தில் கருணாநிதி என்னிடம் சொன்னார்.

2016-இல் ஆட்சி

2016-இல் ஆட்சி

2016-ல் நாம் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. இப்போ ஆட்சி அமைந்ததும் அதனை செயல்படுத்தும் போது இருந்த சந்தோஷத்தை விட , இந்த திட்டத்தால் பெண்களுக்கு நன்மை ஏற்பட்டிருப்பதும் அதனை பெண்கள் உணர்ந்திருப்பதும்தான் கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது" என்று பகிர்ந்து கொண்டாராம் ஸ்டாலின்.

இலவச பஸ்

இலவச பஸ்

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தால், தனியார் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பது 25 சதவீதம் குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் கட்டணம் உயர்ந்த நிலையில் ஸ்டாலினின் இந்த அறிவிப்பானது குடும்பத்திற்கு கணிசமான தொகையை மிச்சப்படுத்தியிருக்கிறது என்பது நிதர்சனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+