கருணாநிதி படத் திறப்பு விழா: ஜனாதிபதிக்கு ஸ்டாலின் கொடுத்த புத்தகம் எது?.. எல்லாமே வரலாற்றுச் சிறப்பு!
சென்னை: கருணாநிதி படத்திறப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்தார்.
Recommended Video
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழாவும் சட்டசபையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு பிச்சாண்டி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கலந்து கொள்ளவில்லை.

புத்தக பரிசு
எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அதில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அது போல் மரியாதை நிமித்தமாக சந்திப்பர்களுக்கு நல்ல பல நூல்களை பரிசாக அளித்து வருகிறார்.

புத்தகம் பரிசாக கொடுத்த ஸ்டாலின்
அந்த வகையில் ராம்நாத் கோவிந்த்திற்கு ஸ்டாலின் ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்தார். அந்த புத்தகத்தின் பெயர் Early Writing System. கிராப்ட்டி எழுத்து முதல் பிராமி எழுத்துக்கள் வரையிலான பயணம் குறித்த புத்தகம்தான் இது.

புத்தகத்தின் ஆசிரியர் ராஜன்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் விமான நிலையம் சென்ற போது அங்கு அவருக்கு 6 புத்தகங்களை பரிசாக கொடுத்தார். தமிழில் வெளிவந்த இந்த 6 புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை கொடுத்தார். அவை திருக்குறள், எழுத்தாளர் நீல பத்மநாபன் எழுதிய தலைமுறைகள், சி எஸ் செல்லப்பா எழுதிய வாடிவாசல், தி ஜானகிராமன் எழுதிய செம்பருத்தி, கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா எழுதிய கரிசல் கதைகள், பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் எழுதிய சூழலில் மிதக்கும் தீபங்கள் ஆகியவற்றை பரிசாக ஸ்டாலின் கொடுத்தார்.

தென்னிந்திய வரலாற்று ஆய்வாளர்
இதற்கு காரணம் வடஇந்திய வரலாற்று ஆய்வாளர்களுக்கு தென்னிந்திய மொழிகள் தெரியாததும் தென்னிந்திய வரலாற்று ஆய்வாளர்களுக்கு வடஇந்திய மொழிகள் தெரியாததும் முக்கிய காரணம்" என அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

புத்தகம் வெளியானது எப்போது?
இந்த புத்தகத்தை மதுரை: பாண்டிய நாடு வரலாற்று ஆய்வு மையம் கடந்த 2015 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அது போல் ஈரோடு மாவட்டம் கொடுமணலில் அவர் கண்டறிந்த அகழ்வாராய்ச்சிகள் குறித்தும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் மூலம் தமிழ்நாட்டின் பழங்கால எழுத்து அமைப்பு குறித்த விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கிராஃபிட்டி என்றால் என்ன
கிராஃபிட்டி என்றால் படங்கள் வடிவிலான எழுத்துரு ஆகும். சூரியன், ஸ்வஸ்திக், நட்சத்திரம், ஏணி, மீன், வில், அம்பு, சக்கரம், மாட்டு வண்டி உள்ளிட்டவை மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் கிராஃபிட்டி ஆகும். இந்த புத்தகம் 439 பக்கங்களை கொண்டதாகும்.

ஆளுநருக்கு என்ன புத்தகம்
அது போல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கும் journey of a civilization என்ற புத்தகத்தை கொடுத்தார் ஸ்டாலின். இந்த புத்தகத்தை ஆர் பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார். சிந்து சமவெளி நாகரிகம் முதல் வைகை நாகரிகம் வரை இதில் இடம்பெற்றுள்ளது. திராவிட மொழிகள் எப்படி உருவானது என்பது குறித்து இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

பழைய தமிழ் மரபுகள்
சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் பழைய தமிழ் மரபுகளுக்கும் இடையே உள்ள பொதுவான கருத்துகளை இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தின் சரிவு ஏற்பட்ட போது அந்த மக்கள் எங்கே சென்றார்கள், சங்க இலக்கியம் எப்படி உருவானது, அதை எழுதியவர்கள் யார்? என்பது குறித்தும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தகம்
சுமார் 17 பிரிவுகளை கொண்ட இந்த புத்தகத்தில் 3 முக்கிய வகைகள் உள்ளன. அவை மரபணுவின் அடிப்படைகள், இடப்பெயர்வுகள், திராவிட அனுமானம் ஆகும். சங்க இலக்கியத்தில் செம்மை, செங்கல் செயான் ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படும். அது போல் மொகன்ஜதாரோ மற்றும் ஹராப்பா நாகரிகத்தின் நிலபரப்புகள் குறித்தும் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்தும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது 524 பக்கங்களை கொண்டது.

ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கும் சட்டசபையின் மாதிரி வடிவம் பரிசாக வழங்கப்பட்டது. அது போல் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு முதல்வர் ஸ்டாலினுக்கு ராஜராஜ சோழன் குறித்த புத்தகத்தையும் சட்டசபை மாதிரி நினைவு பரிசையும் வழங்கினார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தின் கீழ் காலம் பொன் போன்றது.. கடமை கண் போன்றது என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. காலம் பொன் போன்றது- எப்போதும் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பது இதன் பொருளாகும்.

கடமை கண் போன்றது
கடமை கண் போன்றது- மனிதனுக்கோ விலங்கிற்கோ கண் எனப்படும் பார்வை எப்படி முக்கியமானதோ அது போன்றது கடமை என்பது இதன் அர்த்தமாகும். கருணாநிதியின் கம்பீர தோற்றத்தின் பின்புலத்தில் நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் என்றால் கருணாநிதிக்கு மிகவும் பிடிக்கும். அது போல் அவர் வெண்கல யானை மீது கையை வைத்த படி இருக்கிறது படம்.

ஆங்கில மொழிபெயர்ப்பில் தமிழ் புத்தகங்கள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் விமான நிலையம் சென்ற போது அங்கு அவருக்கு 6 புத்தகங்களை பரிசாக கொடுத்தார். தமிழில் வெளிவந்த இந்த 6 புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை கொடுத்தார். அவை திருக்குறள், எழுத்தாளர் நீல பத்மநாபன் எழுதிய தலைமுறைகள், சி எஸ் செல்லப்பா எழுதிய வாடிவாசல், தி ஜானகிராமன் எழுதிய செம்பருத்தி, கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா எழுதிய கரிசல் கதைகள், பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் எழுதிய சூழலில் சுழலில் மிதக்கும் தீபங்கள் ஆகியவற்றை பரிசாக ஸ்டாலின் கொடுத்தார்.
-
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications