சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிஸ் ஆயிடுச்சே.. வருத்தத்தில் ஸ்டாலின்.. உதயநிதிக்கு வருதாம் புது பதவி.. காத்திருக்கும் அசைன்மென்ட்

உதயநிதிக்கு புது பொறுப்பு தரப்பட உள்ளதாக தகவல்கள் கசிகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாத காலமான நிலையில், முக ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.. அதேசமயம், 2 முக்கியமான விஷயங்களும் திமுக வட்டாரத்தில் பரபரத்து வருகின்றன.

ஸ்டாலின் முதல்வர் பொறுப்பை ஏற்றபோது, மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது தமிழ்நாடு.. ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் உயிரிழக்கும் அளவுக்கு கொடூரமாக இருந்தது.

லாக்டவுனை தவிர, இந்த கொரொனாவை கட்டுப்படுத்த வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்தார் ஸ்டாலின்.. தான் ஒரு முதல்வராக இருக்கும்பட்சத்தில் எத்தகைய அறிவிப்பினையும் வெளியிட்டிருக்கலாம்..

அடேங்கப்பா.. இது லிஸ்ட்லயே இல்லையே.. ராயப்பேட்டை மருத்துவமனையில் உதயநிதி செய்த வேற லெவல் 'சம்பவம்'அடேங்கப்பா.. இது லிஸ்ட்லயே இல்லையே.. ராயப்பேட்டை மருத்துவமனையில் உதயநிதி செய்த வேற லெவல் 'சம்பவம்'

 லாக்டவுன்

லாக்டவுன்

ஆனால், தன்னிச்சையாக முடிவெடுப்பது சரியாக இருக்காதுஎன்று உணர்ந்து, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி லாக்டவுன் பற்றி கருத்து கேட்டார்.. அதன்பிறகே லாக்டவுன் அறிவித்தார். இதன் பலன் இன்று கண்கூடாக தெரிகிறது.. தொற்று மெல்ல மெல்ல குறைந்து கொண்டிருக்கிறது.. தமிழ்நாடும் மீண்டு கொண்டிருக்கிறது.

 அமைச்சரவை

அமைச்சரவை

திமுக அமைச்சரவையில் இருக்கும் எல்லாருமே பம்பரமாக சுழன்று வேலை பார்க்கிறார்கள்.. இது ஸ்டாலினே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, நேரடியாக கள ஆய்வு செய்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த 30 நாட்களில் எத்தனையோ அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.. தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களையும் அறிவித்து வருகிறார்.. மாற்று கட்சிகளிடம் நட்பு பாராட்டி வருகிறார்..

சாதனை

சாதனை

இருந்தபோதிலும் இந்த ஒரு மாத காலத்தில் சாதனை என்று சொல்வதில் மிக முக்கியமானது அதிகாரிகள் நியமனமும், தொற்றை கட்டுப்படுத்தும் செயல்களும்தான்..! வெறும் 30 நாட்களில் ஒரு அரசு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை திமுக அரசு உணர்த்தியிருக்கிறது..!

தொகுதிகள்

தொகுதிகள்

ஆனாலும், முதல்வருக்கு ஒரு வருத்தம் இருக்கிறதாம்.. நடந்து முடிந்த தேர்தலில், மேலும் சில தொகுதிகளை வெற்றி பெற்றிருக்கலாமே, அதாவது 20 தொகுதிகள் மிஸ் ஆயிடுச்சே என்ற கவலை அவருக்குள் இருப்பதாக சொல்கிறார்கள்.. இந்த வருத்தம் பிரசாந்த் கிஷோருக்கும் இருப்பதாகவே தெரிகிறது.. இவர்கள் போட்ட கணக்கு வேறு.. களத்தில் கிடைத்த கணக்கு வேறு.

Recommended Video

    புதுப்பொலிவுன் Chennai! CM Stalinன் Project Blue திட்டம்! | OneIndia Tamil
    இணக்கம்

    இணக்கம்

    எனவே.. வரப்போகும் உள்ளாட்சி, எம்பி தேர்தல்களில் கூடுதல் தொகுதிகளை கைப்பற்றும் முயற்சியில்தான் ஸ்டாலின் தற்போது இறங்கி வருவதாக சொல்கிறார்கள்.. இப்போது நடந்து வரும் அரசியல் சூழ்நிலையை பார்த்தால், ஓபிஎஸ்ஸுடன் இணக்கமாக சென்று, எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு செக் வைத்து வருவதாக கருதப்படுகிறது.. அதேபோல, சீமான், பாமக, தேமுதிக போன்றவைகளுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சொல்கிறார்கள்.

     கட்சி பொறுப்பு

    கட்சி பொறுப்பு

    இன்னொது விஷயமும் கசிகிறது.. விரைவில் உதயநிதிக்கு ஒரு பொறுப்பு தர போகிறாராம்.. உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்படாத நிலையில், வாரிசு அரசியல் என்ற விவகாரத்துக்கே முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்டாலின்.. எனினும் உதயநிதியின் செயல்பாடுகள் அனைவரும் ஈர்க்கும்படியாகவே அமைந்து வரும் நிலையில் விரைவில் அவருக்கு முக்கிய பொறுப்பு தரப்போவதாக தெரிகிறது.. ஆனால், ஆட்சியில் பொறுப்பு இல்லையாம்.. கட்சியில்தான் மிக முக்கிய பதவியை உதயநிதிக்கு, முதல்வர் தர வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.. பார்ப்போம்..!

    English summary
    MK Stalin is going to give Udhayanidhi Stalin a new post, say sources
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X