மக்கள் உயிர் காப்போம்; அப்பாக்களின் நினைவுகளால்...கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின், கனிமொழி நெகிழ்வு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக லோக்சபா எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளனர்.
கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தலைநிமிர்ந்து வருகிறேன் என்ற தலைப்பில் இன்று காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தலைநிமிர்ந்து வருகிறேன் வீடியோ
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என தலை நிமிர்ந்து வருகிறேன்.. வாழ்த்துகள் ஸ்டாலின் என சொல்வீரா தலைவர் அவர்களே! என அதில் ஸ்டாலின் உருக்கமாக பேசியிருந்தார். இதேபோல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அர்ப்பணிப்போம்- ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் ட்வீட்: மக்களின் உயிரைக் காப்பதே நம் தலையாய பணி அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவதே தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு சேர்ப்பதாகும். கொரோனா பேரிடர் ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம்.

நினைவுகளால் நிரம்பி வழிகின்ற-கனிமொழி
திமுக எம்.பி கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன. #HBDKalaignar98 #kalaingarforever என பதிவிட்டுள்ளார்.

உயிர் நெல்மணி- தமிழச்சி
மற்றொரு திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன், நான் உண்ணும் ஒரு பிடி அன்னம் கலைஞரது பெயரெழுதிய உயிர் நெல்மணிகளால் விளைந்தது. நான் அருந்தும் ஒரு துளி நீர் கலைஞரது பெயரெழுதிய மூலக்கூறால் விளைந்தது. நான் சுவாசிக்கின்ற சிறு மூச்சு கலைஞரது பெயரெழுதிய உயிர்க்காற்றால் பிறந்தது. நான் துயிலும் ஓரிரவு உறக்கம் கலைஞரது பெயரெழுதிய நற் கனவுகளால் நிறைந்தது. என் ஊனிலும், உயிரிலும் கலந்திருக்கின்ற ஒப்புயர்வற்ற ஒரே தலைவர், முத்தமிழறிஞரின் பிறந்தநாளான இன்று அவரது புகழினைப் போற்றி வணங்குவோம் என நெகிழ்ந்துள்ளார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications