ஆளுநர் ரவி பதவி நீட்டிக்கப்படுமா? பிரஸ் மீட்டில் டக்கென ரியாக்ஷன் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அங்கிருந்து கிளம்பிய தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், செய்தியாளர்கள், ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவி காலம் நீட்டிக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்க்ஷன் என்ன தெரியுமா?
சென்னை கொளத்தூர், எவர்வின் பள்ளி வளாகத்தில் இன்று கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் ரியாக்ஷன்: தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த அரசு விழாவை முடித்து கொண்டு புறப்படும் போது செய்தியாளர்கள் சூழ்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின், "நான் ஜனாதிபதியும் இல்லை.. பிரதமரும் இல்லை" என பதில் அளித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வரிடம் பேசியிருக்கிறேன். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. வயநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ராகுல் காந்தி மீதான சாதி ரீதியிலான தாக்குதல் குறித்து இப்போது கருத்து கூற முடியாது" எனத் தெரிவித்தார்,
ஆளுநர் பதவிகாலம்: தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் ஆர்.என். ரவியின் பதவிகாலம் இந்த மாதத்தோடு நிறைவடையவுள்ள நிலையில், புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா, அல்லது ஆர்.என்.ரவியின் பதவிகாலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் 10 மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய உளவுத்துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என். ரவி, 2019 ஆகஸ்ட் மாதம் நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றி இருந்த நிலையில், தமிழக ஆளுநராக 2021-ம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டார். நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழ்நாட்டில் மூன்று வருடம் என அவரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
பதவி நீட்டிப்பு?: தனது பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து அவர் டெல்லியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக ஆளுநராக அவரே தொடர்வார் எனக் கூறப்பட்டு வருகிறது. அண்மையில் வெளியான புதிய ஆளுநர்கள் நியமன அறிவிப்பில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. எனவே, ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!










Click it and Unblock the Notifications