கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. "ஸ்டாலின் அண்ணன் சீர் ரூ.1000 தந்தாரு".. முதல்வர் ஹேப்பி - பூரிப்பு
சென்னை: திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டு மகளிருக்கும் ஏற்பட்டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போனேன் என்று முதல்வர் ஸ்டாலின் பூரிப்புடன் கூறியிருக்கிறார்.. மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசும்போது, முதல்வர் இவ்வாறு மகிழ்ந்து கூறினார்.
நேற்றைய தினம் தருமபுரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 993 நிறைவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. ரூ.560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.. இதையடுத்து, விழாவில் முதல்வர் பேசும்போது, மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து சிலாகித்து போனார்.

பேச்சு: முதல்வர் பேசும்போது, "இதே தருமபுரியில் தான், 1989 -ல் மகளிர் சுய உதவிக்கு குழு தமிழகத்தில் தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.. அதேபோல, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஆண்டு இதே தரும்புரியில்தான், நான் தொடங்கி வைத்தேன். இந்த 2 திட்டங்களும் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டு, மகளிர் வாழ்வில் ஒளி விளக்காக வந்து கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு சொத்தில் சமபங்கு கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியவர் கலைஞர்.. இது பெண்ணினத்துக்கு வழங்கப்பட்ட மாபெரும் அதிகார கொடை. இதன் அடுத்தகட்ட திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.
தேர்தல் அறிக்கை: பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். அதை போலவே செயல்படுத்தினோம். இதன்மூலம் இன்று ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தருகிறோம் என்றால் அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுகிறோம் என்றே அர்த்தம்.
உரிமைத்தொகையை பெற்ற பெண் ஒருவரின் பேட்டியை சமீபத்தில் டிவியில் பார்த்தேன். அதில், "இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர்" என்று சொன்னாங்க... அப்போது எனக்கு என்ன மனதில் தோன்றியது என்றால், திராவிட மாடல் அரசுக்கும் தமிழ்நாட்டு மகளிருக்கும் ஏற்பட்டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போனேன்.
திராவிட மாடல்: இந்த திராவிட மாடல் அரசு இதுவரை அறிவித்துள்ள திட்டங்களை பட்டியலிட வேண்டும் எனில் நாள் முழுக்க நான் பேசிக் கொண்டிருக்க வேண்டும். சிலிண்டர் விலையை 10 வருடங்களில், ரூ.500க்கு மேல் உயர்த்தி விட்டு இப்போது தேர்தல் வருவதால் 100 குறைத்துள்ளது மத்திய அரசு. தேர்தல் நேரத்தில் மட்டுமே பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது பாசம் பொங்குகிறது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 75 சதவீத நீதி பங்களிப்பு மாநில அரசுதான் வழங்குகிறது. மத்திய அரசுக்கு வரி வருவாய் எங்கிருந்து வருகிறது? மாநிலங்களின் மக்கள் கொடுக்கின்ற வருவாய்தான். ஒன்றிய அரசு வெறும் கையில் முழம் போட்டு கொண்டுள்ளனர்" என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications