உங்களுக்கோ.. பிரேமலதாவுக்கோ நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ஸ்டாலின் பொளேர்!
பிரேமலதாவுக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: "25 கோடி ரூபாய் தந்தது பற்றி நான் பிரேமலதாவுக்கோ, உங்களுக்கோ பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. யாருக்கு பதில் அளிக்க வேண்டுமோ அவர்களுக்கு பதிலளித்து விட்டோம்" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட கூட்டணி கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாய் வழங்கியதாக, பிரமாண பத்திரத்தை திமுக தாக்கல் செய்திருந்தது.

யாருக்கு எவ்வளவு ரூபாய் தரப்பட்டது என்ற விவரத்தை இதற்கு முன்பு இப்படி திமுக சொன்னதே இல்லை. இப்போது கட்சி பெயர்களுடன் அவர்களுக்கு வழங்கிய தொகையை வெளிப்படையாக சொன்னது அனைத்து தரப்புக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
இது சம்பந்தமான பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நேற்று பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதாவும், தேர்தல் நிதியாக திமுக ரூ.25 கோடி கொடுத்தது குறித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் இன்று மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது இந்த விவகாரம் குறித்து அவரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மு.க.ஸ்டாலின் கூறுகையில், "இதுகுறித்து பிரேமலதாவுக்கோ அல்லது உங்களுக்கோ பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுகுறித்து யாரிடம் பதிலளிக்க வேண்டுமோ அவர்களுக்கு, வருமான வரித்துறைக்கு, தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்து விட்டோம்" என்று கூறி விட்டு கிளம்பினார் ஸ்டாலின்.


Click it and Unblock the Notifications
