சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களை இன்னல்படுத்தும் இ-பாஸ் முறை இனித் தேவையில்லை... ரத்து செய்க -மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மத்திய அரசே இ-பாஸ் கட்டாயமில்லை என அறிவித்த பிறகும் அதனை அதிமுக அரசு தொடர்வது ஏன் என வினவியுள்ளார்.

செயற்கையான தடையை ஏற்படுத்தி ஊழல் முறைகேடுகளுக்கு அரசு கதவை திறந்து வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

இ-பாஸ் முறை

இ-பாஸ் முறை

இ-பாஸ் முறையை தொடர்ந்து நீட்டித்து, மக்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி வருவது மனிதநேயமற்ற செயல் மட்டுமல்ல; அது அடுக்கடுக்கான எதிர் விளைவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று அ.தி.மு.க. அரசை எச்சரிக்க விரும்புகிறேன். மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் - ஏறக்குறைய ஐந்தாவது மாதமாக, ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு, தங்களது அவசரத் தேவைகளுக்குக் கூட போக முடியாமல், மக்கள் அலைக்கழிக்கப்பட்டு அல்லல்களுக்குள்ளாக்கப் படுகிறார்கள்.

கண்டனத்திற்குரியது

கண்டனத்திற்குரியது

சாதாரண மக்கள் அனுதினமும் அனுபவிக்கும் இந்த வேதனையை சிறிதும் உணராமல், உப்பரிகையிலே அமர்ந்து கொண்டு ஊரைப் பார்ப்பதைப் போல, கோட்டையிலே வீற்றிருந்து, நடக்கும் கொடுமைகளை அமைதியாகப் பார்த்து முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் ரசித்துக் கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

பாஸ் கிடைப்பதில்லை

பாஸ் கிடைப்பதில்லை

திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு உள்ளிட்ட அவசரத்தேவைகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தாலும் - இந்த அவசரங்களுக்குக் கூட விண்ணப்பிக்கும் இ-பாஸ் பலமுறை நிராகரிக்கப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் இ-பாஸ் வழங்கும் நடைமுறை படுதோல்வி அடைந்துவிட்டது. உரிய முகாந்திரங்களுடன் விண்ணப்பித்தாலும், முதலில் ஏதேதோ பொருத்தமில்லாத காரணங்களைச் சொல்லி மறுக்கப்பட்டு விடுகிறது. பத்து முறை விண்ணப்பித்தாலும், நேர்மையான முறையில் பாஸ் கிடைப்பதில்லை.

துயர சூழல்

துயர சூழல்

சென்னையிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்கள் சொந்த ஊருக்குப் போன மக்களோ திரும்பிச் செல்ல முடியவில்லை. தாய், தந்தையர், உற்றார், உறவினர்கள்- உயிர் நண்பர்களின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல் தொலைவில் இருந்தே "கதறி அழும்" மிகத் துயரமான சூழ்நிலையை அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இ-பாஸ் வழங்குவதில் துவக்கத்திலிருந்தே, ஊழல் தாராளமாகவும், தொடர்ச்சியாகவும் அரங்கேறி வருகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் வித்திடும் - வெளிப்படைத்தன்மை சிறிதும் இல்லாத ஒரு இ-பாஸ் நடைமுறை இந்தப் பேரிடர் நேரத்தில் - கொரோனா ஊரடங்கில் யாருக்குப் பயன்படுகிறது? என்ற நியாயமான கேள்வி அனைத்து மக்கள் மனதிலும் ஆர்ப்பரித்து எழுந்துள்ளது.

என்ன வகை நிர்வாகம்?

என்ன வகை நிர்வாகம்?

'மத்திய அரசே ஊரடங்குத் தளர்வுகளை அறிவித்து, இ-பாஸ் நடைமுறை கட்டாயம் இல்லை' என்று அறிவித்த பிறகு - அ.தி.மு.க. அரசு மட்டும் இந்த முறையை தொடர்ந்து உள்நோக்கத்துடன் வைத்திருப்பது, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவிதத்திலும் தீர்வாகாது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறோம் என்று கூறும் முதலமைச்சர் இ-பாஸ் நடைமுறையில் ஏன் அதைக் கடைப்பிடிக்கவில்லை? அவரவர் சொந்தப் பொறுப்பில் கூட, 'மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம்' என்று அறிவித்திருப்பது முதலமைச்சர் திரு. பழனிசாமியின் என்ன வகை கொரோனா நிர்வாகம்?

மதிப்பளியுங்கள்

மதிப்பளியுங்கள்

மதிப்பளியுங்கள்

English summary
mk stalin says, e-pass system is no longer required
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X