1,000 புது மினி பேருந்துகள்.. சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சென்னை மாவட்டத்துக்கு என தனியாக திமுக தேர்தல் அறிக்கையினை இன்று வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதன்படி, சென்னையில் 1000 புது மினி பேருந்துகள் இயக்கப்படும், 20 ஆயிரம் உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். சென்னை பெருநகரத்திற்கு என்று திமுக தனியாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திற்கு என்று பிரத்யேக தேர்தல் அறிக்கையினை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். இதன்படி, சென்னையில் 1000 புதிய மினி பஸ்கள் இயக்கப்படும், 2027 ஆம் ஆண்டுக்குள் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்படும். வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ விரிவாக்கப் பணிகள் முடிக்கப்படும், 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: -

மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள்
* நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.
* மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
* அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
* கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கபடும்.
மழைநீர் வடிகால்கள் பணி
* சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து வழங்கும் வகையிலும், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.
* போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (AM) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.
* எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும்.
* மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும்.
* மழைநீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும்.
* பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடிக்கப்படும்.
* அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029க்குள் அமைக்கப்படும்.
* மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சனைக்குத் தீர்வு
* விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு (ABC) திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.
* தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் வருவாக்கப்படும்.
உலகளாவிய சிறப்பு மையம்
* Al, Animation, Visual Effects, Gaming, and Immersive Technologies
* ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு
* 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள்" என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications