சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர்னு கூட்டத்தை பார்த்ததும்.. ஸ்டாலினுக்கு கனவு முளைச்சிருச்சு.. போட்டு தாக்கிய பாண்டியராஜன்!

ரஜினி கட்சி தொடங்கினால் ஸ்டாலின் போராட வேண்டியிருக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "ரூமுக்குள்ளேயே ஸ்டாலின் முடங்கி இருந்தார் இல்லையா? அதான் திடீரென கூட்டத்தை பார்த்ததால் முதலமைச்சர் கனவு காண்கிறார்" என்று அமைச்சர் பாண்டியராஜன் ஒரு விஷயத்தை கொளுத்திபோட, திமுகவினர் கொந்தளித்து வருகின்றனர். மேலும், ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும்தான் இந்த முறை போட்டியா என்ற ரீதியில் விவாதங்கள் சூடுகிளப்ப நடந்து கொண்டிருக்கின்றன.. அதற்கேற்றபடி அமைச்சர்கள், தலைவர்களின் பேச்சுக்களும் எதிரொலித்தபடியே உள்ளன.

அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் திருவள்ளூரில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார்... பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது "ரூமுக்குள்ளேயே முடங்கி கிடந்த திமுக தலைவர் ஸ்டாலின், திடீரென கூட்டத்தை பார்த்ததால் முதலமைச்சர் கனவு காண்கிறார்.. ஆனால், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கே போராட வேண்டியிருக்கும்" என்றார்.

 மொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு மொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு "எஸ்எம்எஸ்" கூட அனுப்ப முடியாதாமே!

பாண்டியராஜன்

பாண்டியராஜன்

அமைச்சர் பாண்டியராஜன் இப்படி கருத்து கூறியது குறித்து திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து சொல்லும்போது,"தளபதி எதிர்க்கட்சி தலைவராக வரப்போவதில்லை... ஆனால் முதலமைச்சராக வரப்போகிறார்... ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்து மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

நோய்ப்பரவல்

நோய்ப்பரவல்

நேரடியாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. பொருளாதார சீரழிவு, வேலையின்மை, நோய்ப்பரலை கட்டுப்படுத்தாத கையாளாகாத அரசுகளாகதான் இந்த அதிமுகவும், பாஜகவும் இருக்கின்றன.. இவைகளுக்கு மாற்றாக திமுக-வை ஆட்சிக்குக் கொண்டுவந்தால்தான் தமிழகம் செழிக்கும்.. இதை மக்களே நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்" என்று நெத்தியடி பதிலை தந்துள்ளார்.

ரஜினி

ரஜினி

இருந்தாலும், அமைச்சர் பேசியது திமுக தரப்பை கடுமையான எரிச்சலை தந்து வருகிறது.. "யாரை கொண்டு போய் யாருடன் சேர்த்து பேசுவது? மிசா காலத்தில் இருந்து கட்சியில் இணைந்து பாடுபட்டு வருகிறார் எங்க தலைவர்.. ஆனால் ரஜினி இன்னமும் கட்சியே ஆரம்பிக்கவில்லை.. அப்படி இருக்கும்போது எப்படி எங்க தலைவர் திண்டாட முடியும்?" என்று உடன்பிறப்புகள் கொந்தளித்து கேள்வி எழுப்புகிறார்கள்.

திமுக தலைவர்

திமுக தலைவர்

ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்வா சாவா என்று ரஜினி சொல்லி இருந்த நிலையில், சில தினங்களாகவே திமுக Vs ரஜினி என்ற பாணியிலேயே விமர்சனங்கள் தொடர்ந்து எழுகின்றன.. கட்சியே தொடங்காத ரஜினியும் திமுக தரப்பையே உற்று கவனித்து வருவதாகவும் தெரிகிறது.. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

சமீப காலமாக ஒதுங்கியிருக்கும் முக அழகிரி ரஜினி மீது கொண்டுள்ள நட்பால் ரஜினியுடன் இணைந்து செயல்படுவாரா என்ற சந்தேகம் இருந்தாலும், நிச்சயம் ஆதரவு தருவார் என்பதில் மாற்று கருத்தில்லை.. அதேபோல, திமுகவில் உள்ள அதிருப்திகள் ரஜினியுடன் தொடர்பில் உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.. அந்த வகையில், திமுக தரப்பு அத்தகைய அதிருப்தி மூத்த தலைகளை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி வருகிறதாம்.. இந்த நிலையில்தான் ரஜினி கட்சி ஆரம்பித்தால் ஸ்டாலின் போராட வேண்டியிருக்கும் என்று கொளுத்திப் போட்டுள்ளார் பாண்டியராஜன்.. திமுக தரப்பு நமுட்டுச் சிரிப்புடன் இதைப் பார்க்கிறதாம்.!

English summary
MK stalin will find it difficult if Rajinikanth launches his party, says minister Mafoi Pandiarajan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X