ராமநாதபுரத்திலிருந்து சென்னை திரும்பியதும்.. ஸ்டாலின் கையில் முக்கிய அஜெண்டா! பரபரக்கும் அறிவாலயம்!
சென்னை: மூன்று நாள் பயணமாக இன்று மாலை மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், வெள்ளிக்கிழமை இரவு சென்னை திரும்பியதும் சனிக்கிழமை முக்கிய கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் நடத்தும் இந்தக் கூட்டத்தில், திமுக சார்பு அணிகளின் செயலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதனால் அதற்கான ஏற்பாடுகள் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
"நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர்" அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது குறித்து,

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையில், 19.8.2023, சனிக்கிழமை, காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள் - அனைத்து அணிச் செயலாளர்கள் - அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.''
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications