அன்பு நண்பர் விஜயகாந்த்.. விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும்.. ஸ்டாலின் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம் பெற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூச்சு திணறல் காரணமாக இன்று அதிகாலை, விஜயகாந்த், சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

 MK Stalin wishes DMDK leader Vijayakanth for his speedy recovery

கடந்த வருடம் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டார் என்றும் கொரோனா இல்லை என்றும் இரு வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், இப்போது மறுபடி விஜயகாந்த் மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தி வருவதால் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கலக்கமடைந்தனர். இருப்பினும் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின்,

 MK Stalin wishes DMDK leader Vijayakanth for his speedy recovery

தனது டுவிட்டர் பக்கத்தில், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் அன்பு நண்பர்
@iVijayakant அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன். இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+