"78 பேரை தட்டி தூக்கிய மகேந்திரன்".. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார்.. ஸ்டாலின் "பளீர்"
சென்னை: மகேந்திரன் திமுகவிற்கு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து இருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வரிசையாக பல்வேறு நிர்வாகிகள் வெளியேறினார்கள். மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் டாக்டர் மகேந்திரனும் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் இன்று மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.

அழைத்து வந்தார்
திமுகவில் இன்று இந்த மகேந்திரனுடன் அவரது ஆதரவாளர்கள் 78 பேர் இணைந்தனர். மநீமவின் பத்ம பிரியாவும் திமுகவில் இன்று இணைந்துள்ளார். அதோடு 11 ஆயிரத்திற்கும் அதிகமான மநீம தொண்டர்கள் திமுகவில் இணைய உள்ளனர். இதற்கான பட்டியலை மகேந்திரன் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.

ஸ்டாலின்
மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக திமுகவுக்கு வந்துள்ளனர். தேர்தலுக்கு முன்பே வந்து இருந்தால் இன்னும் அதிக இடங்களில் வென்று இருக்கலாம். இவர்கள் முன்பே கட்சியில் இணைந்து இருந்தால் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை வென்று இருப்போம்.

லேட்
இவர் லேட்டாக வந்து இருந்தாலும், கடைசியில் திமுகவிற்கு வந்தது மகிழ்ச்சி. திமுக கட்சியில் இணைந்த எல்லோரையும் அன்போடு வரவேற்கிறது, என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பேசிய மகேந்திரன் திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

சித்தாந்தம்
திமுகவின் கொள்கைகள்தான் எனது சித்தாந்தமாக இருந்தது. தொடக்கத்தில் இருந்தே திமுகவின் கொள்கைதான் எனது கொள்கையும். திமுகவின் கொங்கு மண்டல வளர்ச்சிக்காக கண்டிப்பாக உழைப்பேன் என்று மகேந்திரன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications