சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடே.. மார்கழி குளிரிலும் தமிழகத்தில் மழை பெய்யப் போகுதாம்.. கூல் நியூஸ் சொன்ன வானிலை மையம்

இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக கடற்கரையை நோக்கி நகரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகாலையில் பனிமூட்டமும் பகலில் வெயிலுமாய் வானிலை மாறி மாறி நிலவும் நிலையில் 5 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்திலும் திருவள்ளூரிலும் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நீங்கள் தான் உதவணும்..' தத்தளிக்கும் பொருளாதாரம்.. இந்தியா & சீனாவிடம் உதவி கேட்கும் இலங்கை! 'நீங்கள் தான் உதவணும்..' தத்தளிக்கும் பொருளாதாரம்.. இந்தியா & சீனாவிடம் உதவி கேட்கும் இலங்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

தமிழக கடற்கரையை நோக்கி நகரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளைய தினம் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மிதமான மழை

மிதமான மழை

31ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

புத்தாண்டு நாளில் மழை

புத்தாண்டு நாளில் மழை

ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 2ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

பனிமூட்டம்

பனிமூட்டம்

இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

English summary
The Met Office has forecast moderate to thundershowers at a few places in the coastal districts of Tamil Nadu and Puduvai Karaikal and light rain in a few places in the inner districts due to the circulation of the atmospheric overlay moving towards the coast of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X