தமிழ்நாட்டை புரிந்து கொள்ளாத மோடி... எதையும் யாராலும் திணிக்க முடியாது... ராகுல்காந்தி உறுதி
3,000 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மீது யாராலும் எதனையும் திணிக்க முடிந்தது இல்லை என்று சொன்ன ராகுல்காந்தி, 3,000 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாட்டின் மீது எதனையும் திணிக்க முடியாது என்று ஆவேசமாக பேசினார்.
சென்னை: மு.க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கிப்பேசினார். தமிழ்நாட்டு கலாச்சாரம், மொழி, மக்களைப் புரிந்து கொள்ளாமல் மோடி பேசுவதாக குற்றஞ்சாட்டினார். 3,000 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மீது யாராலும் எதனையும் திணிக்க முடிந்தது இல்லை என்று சொன்ன ராகுல்காந்தி, 3,000 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாட்டின் மீது எதனையும் திணிக்க முடியாது என்று ஆவேசமாக பேசினார்.
உங்களின் எல்லாவிதமான பரிமாணங்களையும் உணர்ந்து கொள்ளும் விதமாக வருகிறேன். இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டேன். நாம் மாநிலங்கள் என்று சொன்னால் அந்த சொல் எங்கிருந்து வந்தது. மாநிலம் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
மக்களிடம் இருந்து குரல் வெளிவருகிறது. அவரது குரலில் இருந்து மொழியும், மொழியில் இருந்து கலாச்சாரமும் வெளிவருகிறது. கலாச்சாரத்தில் இருந்து வரலாறும் வரலாற்றில் இருந்து மாநிலம் வருகிறது என்று சொன்னார். அதனால்தான் நான் நாடாளுமன்றத்தில் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொன்னேன் என்று உறுதியாக கூறினார்.

ராகுல்காந்தி உறுதி
மாநிலங்களில் இருந்துதான் இந்தியா வருகிறது என்று அழுத்தமாக சொன்னேன். எழுத்துக்கள் சொற்களாகவும், சொற்கள் வாக்கியமாகவும், வாக்கியங்கள் ஒன்று சேர்ந்து கவிதையாக மாறுகிறது. நீங்கள் அனைத்துக்கும் மதிப்பு தர வேண்டும். உங்களால் வேறு எதையும் மதிக்க முடியாது. தமிழ்நாடு வார்த்தைகள் அல்ல.

3000 ஆண்டு பழமையானது
தமிழ்நாடு 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாடு என்பது மாநிலம், மக்கள், பிரதமர் இங்கு வரும் போதெல்லாம் பாரம்பரியம் புரியாமல் பேசுகிறார். அவர் இங்கு வரும்போது சொற்களை புரிந்து கொள்வதில்லை. பின் எப்படி தமிழ்நாடு பற்றி பேசுகிறார் என்று கேள்வி எழுப்பினார். அவருடைய குரலைப் புரிந்து கொள்ள முடியாமல் நான் உங்களைப்பற்றி பேசுகிறேன் என்று எப்படி அவர் கூற முடியும்.

புரிந்து கொள்ளாத மோடி
அவர்கள் திருப்பி திருப்பி கேட்கிற எதையும் உணர்ந்து கொள்ளாமல் நீங்கள் என்ன மரியாதை வைத்திருக்க முடியும்.
தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு மொத்தமாக ஜிஎஸ்டி எங்களுக்கு பாதகமாக இருக்கிறது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் நீங்கள் திரும்ப திரும்ப அவமதிக்கிறீர்கள் என்று சொன்னார். நான் நாடாளுமன்றத்தில் பேசும் போது சொன்னேன். அவர்கள் தமிழ்நாட்டில் வரலாற்றைப் பற்றியும் புரிந்து கொள்வதில்லை.

3,000 ஆண்டுகால் நாகரிகம்
தமிழ்நாடு என்பது 3,000 ஆண்டுகால் நாகரிகம் கொண்டது; தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம், தமிழ்நாடு என்ன என்பதை புரியாமல் பிரதமர் மோடி பேசுகிறார். நீட் தேர்வு தொடர்பாக தமிழக மக்கள் தொடர்ந்து கேள்வி கேட்கிற போது பதில் தராத பிரதமர் மோடி என்ன மரியாதை வைத்திருக்கிறீர்கள்?. தமிழ்நாட்டின் வரலாற்றையும் தேசத்தின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதில்லை என்று சொன்னார். 3,000 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மீது யாராலும் எதனையும் திணிக்க முடிந்தது இல்லை என்று சொன்ன ராகுல்காந்தி, 3,000 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாட்டின் மீது எதனையும் திணிக்க முடியாது என்று ஆவேசமாக பேசினார்.

அன்பும் அக்கறையும் தேவை
எனக்கு தமிழ்நாட்டு மக்களைப்பற்றி அனுபவம் இருக்கிறது. அன்போடும் அக்கறையோடும் பேசினால் தமிழக மக்களிடம் இருந்து எதையும் பெறலாம். நீங்கள் இங்கு வாருங்கள் அவர்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளுங்கள் பதிலுக்கு அவர்களும் உங்களுக்கு அன்பையும் பரிவையும் வாரி வழங்குவார்கள் என்று சொன்னார் ராகுல்காந்தி.

மாநில உரிமைகள் பறிப்பு
பிரதமருக்கு எதையும் சரியாக புரிந்து கொள்ள முடியாது. தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பல மாநிலங்களையும் அவரால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்று பிரதமர் மோடியை தாக்கினார்.
ஓமர் அப்துல்லா பேசியதையே திரும்ப சொன்ன ராகுல்காந்தி, விடுதலைப்பெற்ற நாட்டில் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மக்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மக்கள் அவர்களே ஆள முடியாமல் தவித்து வருகின்றனர். குஜராத், உத்தரபிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகள் ஜம்மு காஷ்மீரை ஆண்டு கொண்டிருக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். இது ஜம்மு காஷ்மீருக்கு இழைத்துள்ள அநீதி என்று சொன்னார். யாரிடமும் எதைப்பற்றியும் கலந்து பேசவில்லை. அதையேதான் தமிழகத்திற்கும் செய்கின்றனர்.

வேற்றுமையில் ஒற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. இந்தியா பல்வேறு மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. இது இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்று சொன்னார். தமிழ்நாடு பல மாநில மக்களிடம் இருந்தும் கற்றுக்கொள்கிறது நாம் அனைவரையும் மதிக்கிறோம் எங்களின் ஒட்டுமொத்தமான கருத்து வேற்றுமையும் ஒற்றுமைதான். நாங்கள் எதை சொல்கிறோமோ அதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று சொன்னார்.

நசுக்கப்படும் குரல்கள்
நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும் இந்தியா எப்படி இருக்க வேண்டும். இந்திய மக்கள் தீர்மானிக்க முடியாதா?மக்களின் குரல் ஒலிக்க வேண்டும். ஆனால் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது. நீதித்துறை, பத்திரிக்கை துறை தொடர்ச்சியாக நசுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். வரலாற்றை எதிர்த்தும் பாரம்பரியத்தை எதிர்த்தும் போரிட்டுக் கொண்டிருக்கும் அவர்கள் தோற்றுக்கொண்டிருப்பார்கள் என்று சொன்னார்.
-
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை!












Click it and Unblock the Notifications