வட இந்திய இந்துத்துவா கட்சியை மெயின் வில்லனாக சித்தரிக்கும் மோகன்லாலின் எம்புரான்-தாக்கு பிடிக்குமா?
சென்னை: இந்திய சினிமாவில் பொதுவாக சிறுபான்மை இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக, இந்தியாவுக்கு எதிரான சக்திகளாக, பாகிஸ்தான் உட்பட பல்வேறு வெளிநாட்டு சக்திகளின் கூலிப்படையாக சித்தரிப்பதும் இந்து- இந்தியா- மதசார்பின்மை பேசுகிற கதாநாயகன்களால் அவர்கள் வெட்டி அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டு அழிப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் இதனில் இருந்து முற்றிலும் நேர் எதிரானதாக, இந்துத்துவா கொள்கை வெறியர் ஒருவர் அரசியல் தலைவராவதையும் அவரையே வில்லனாக சித்தரித்து, அந்த இந்துத்துவா வெறித்தனத்தால் குடும்பத்தை பறிகொடுத்த சிறுபான்மை இளைஞனால் சுட்டு வீழ்த்தப்படுவதுமான கதையுடன் வெளியாகி இருப்பதுதான் மோகன்லாலின் எம்புரான் -லூசிஃபர் 2 திரைப்படம்.
மலையாளத்தில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானதுதான் லூசிஃபர் திரைப்படம். கேரளா அரசியலையும் சர்வதேச கண்ணுக்கு தெரியாத 'ஆட்டுவிக்கும்' மாஃபியா சக்தியையும் தொடர்புபடுத்தி பேசியது லூசிஃபர்-1 திரைப்படம்.

கேரளா அரசியல்
லூசிஃபர் திரைப்படமானது அடிப்படையில் கேரளாவின் காங்கிரஸ் கட்சி சாயலிலான ஒரு கட்சியை மையப்படுத்தியது திரைப்படம். தற்போது லூசிஃபர்-2 திரைப்படம் எம்புரான் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.
இந்திய சினிமாக்களின் எழுதப்படாத ஸ்கிரிப்ட்
இந்திய சினிமாக்கள் பொதுவாக, சிறுபான்மை இஸ்லாமியர்கள், போராளிகள், மாவோயிஸ்டுகளை வில்லன்களாகவே மையப்படுத்தும்; கோட்பாட்டு அடிப்படையில் போராடுகிறவர்களாக இருந்தாலும் கூட பாலியல் வக்கிரம் படைத்தவர்களாகவே சித்தரிக்கப்படுவதுதான் எழுதப்படாத ஸ்கிரிப்ட். இதற்கு தமிழில் கமல்ஹாசன், அர்ஜூன், விஜயகாந்த் நடித்த எத்தனையோ படங்கள் உதாரணமாக இருக்கின்றன.
எம்புரான் எப்படி வேறுபட்ட திரைப்படம்?
ஆனால் மோகன்லாலின் எம்புரான்-லூசிஃபர் 2 திரைப்படம் இந்த அடிப்படையை ஆர்டிஎக்ஸ் வைத்து தகர்த்து எறிந்துள்ளது. இந்த படத்தின் தொடக்கமே, வட இந்தியாவில் இந்துத்துவா வெறி கொண்ட கும்பல் ஒன்று இஸ்லாமியர்களை நரவேட்டையாடுதுடன் தொடங்குகிறது; கர்ப்பிணி, முதியவர்கள் என்றும் பாராமல் மிருகத்தனத்துடன் கொன்று குவிக்கிறது; மரணத்தின் முகட்டில் கூட பாலியல் வல்லுறவு கொண்டு வெறித்தனத்தை காட்டுகிறது அந்த வட இந்திய இந்துத்துவா கும்பல்.
கேரளாவில் ஊடுருவும் வட இந்திய இந்துத்துவா கட்சி
இந்த நிலையில் கேரளாவில் ஏற்கனவே இருக்கும் காங்கிரஸ்- இடதுசாரி கட்சிகளின் இருதுருவ அரசியலைக் கலைக்கும் வகையில் பஜ்ரங் எனும் வட இந்திய இந்துத்துவா கட்சி கேரளாவுக்குள் ஊடுருவுகிறது. ஊழல்களில் திளைக்கிற கேரளா முதல்வரை டெல்லி செல்வாக்கை வைத்து மிரட்டி 'கூட்டணி' வைக்கிறது பஜ்ரங். இந்த பஜ்ரங் கட்சியின் தலைவர் வேறுயாருமல்ல.. வட இந்தியாவில் இஸ்லாமியர்களை நரவேட்டையாடுபவராக படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் இந்துத்துவா வெறியர்தான்.
டெல்லி பிடியில் கேரளா முதல்வர்
இப்படித்தான் மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் விரிகிறது. வட இந்திய இந்துத்துவா கட்சி+ ஊழல்களால் 'டெல்லி' பிடியில் சிக்கி இருக்கும் கேரளா முதல்வர்- இவர்கள்தான் எம்புரான் திரைப்படத்தின் பிரதான வில்லன்கள். காங்கிரஸ் சாயலிலான கட்சியை முதல்வர் உடைக்கும் போது அந்த கட்சிக்கு தலைமை ஏற்க வருபவராக மஞ்சு வாரியர்.
இந்துத்துவா வில்லனை வீழ்த்தும் இஸ்லாமிய இளைஞன்
மஞ்சுவாரியரின் பின்புலமாக இருந்து இந்துத்துவா பஜ்ரங்+ கேரளா ஊழல் முதல்வரை வேட்டையாடுகிறவர்தான் எம்புரான் எனும் மோகன்லால். இதில் உச்சகட்டமே, இந்துத்துவா வெறிக் கும்பலால் தமது ஒட்டுமொத்த குடும்பமும் தன் கண் முன்னாலே ஈவிரக்கமின்றி வேட்டையாடப்பட்ட போது அதில் இருந்து தப்பி மோகன்லாலிடம் அடைக்கலமாகும் இஸ்லாமிய இளைஞனே, இந்துத்துவா வெறிகொண்ட வில்லன் கதையை முடிப்பதாகும்.
தடை எல்லாம் இல்லையா?
ஒருகணம் யோசித்தால் இந்திய சினிமாவில் அதுவும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது எல்லாம் சாத்தியம்தானா? எப்படி 'தடைகளை' எதிர்கொள்ளாமல் வலம் வருகிறது 'எம்புரான்' என்கிற கேள்விகளை இயல்பாகவே எழுப்பிவிடுகிறது.
பெரியாரிஸ்டுகள் ஆதரவு
இந்த திரைப்படம் தொடர்பாக பெரியாரிஸ்ட்டான அதி அசுரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், சினிமாவில் பலகோடிகளைச் சம்பாதிக்கும் நேரத்தில் அதை விட்டு விட்டு அரசியலுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருப்பது சாதனை இல்லை. பலநூறு கோடிகளைச் சம்பாதிக்கும் காலத்தில் சங்கிகளின் சங்கைப் பிடிப்பது போல எம்புரான் Empuraan எனும் சினிமாவைக் கொடுப்பது தான் மிகப்பெரிய கெத்து. தடை செய்யப்படுவதற்கு முன் பார்த்து விடுங்கள்.
KGF, புஷ்பா, லியோ போல 200 கோடி, 500 கோடி பட்ஜெட்டில் வெறும் வியாபாரத்தை மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் சினிமாக்கள் வந்து கொண்டிருக்கும் காலத்தில் எம்புரான் போல துணிச்சலான சினிமாவைக் கொடுத்து, வெற்றியும் பெற்றுள்ள mohanla PrithvirajSukumaran இருவருக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications