இளைஞர்களுக்கு குட் நியூஸ்.. போட்டி தேர்வுக்கு படிக்கிறீங்களா? உதவித்தொகை எப்போது? ஸ்டாலின் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிமைப் பணித் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உதவித்தொகை வழங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைவில் திட்டம் தொடங்கப்படும், மாணவர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முக்கியமாக தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவேண்டும் என்று முதனிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வை எதிர்கொள்ள ஊக்கமாக இந்த தொகை வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான் இந்த தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டார்.

Money help for Competitive exam writers from Tamil Nadu Government: CM Stalin announces

அதன்படி, குடிமைப் பணித் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவேண்டும் என்று முதனிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 1,000 பேருக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ஊக்கத்தொகையும், பயிற்சியும் வழங்குகின்ற புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது, வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து இது தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,. இந்த திட்டம் போன்ற சிறப்பான வாய்ப்புகளை பயன்படுத்தி, மாநில அரசுப் பணிகள் போலவே, ஒன்றிய அரசுப் பணிகளிலும் நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் தேர்வாக வேண்டும்.

நம்முடைய அரசு அமைந்த கடந்த இரண்டாண்டு காலத்தில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட இருக்கிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.
உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுவது என்பது அந்தக் குடும்பங்களில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தித் தருவதோடு அரசு நிர்வாகத்தில் ஒரு புதிய வேகத்தையும், உற்சாகத்தையும் இது நிச்சயமாக அளிக்கும்.

அரசின் திட்டங்கள் பாரபட்சமில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும். நம்முடைய அரசின் கொள்கையை அரசின் அங்கமாக இருக்கின்ற நீங்கள் எல்லோரும் மனதில் வைத்து செயலாற்றவேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அரசு சமூகநீதி காக்கும், மக்கள் நலன் பேணக்கூடிய அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு அரசனிடம் முறை வேண்டும் போதெல்லாம், எளிமையாக

காட்சி தந்து தீர்ப்பை பெற்றால், விரும்பும் போது மழையை பெற்றது போல மக்கள் மகிழ்வார்கள் என்று புறநானூறு சொல்லுகிறது.

அதைப் போல மக்கள் உங்களிடம் கோரிக்கையுடன் வரும்போதெல்லாம் என்னுடைய இன்னொரு முகமாக, என்னுடைய பிரதிநிதியாக, இந்த அரசாங்கத்தின் அலுவலராக இருக்கின்ற நீங்கள், மக்களை எளிமையாக அணுகி, அவர்கள் குறைகளையும், பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து, அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் அவர்களிடம் சேர்த்து பயனடையச் செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் அதைத்தான் நீங்கள் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு ஏழையின் கண்ணீரை உங்கள் கரங்கள் துடைத்தால் அதனால் அடைகின்ற பெருமை என்பதும் என்னைத்தான் சேரும். அதே நேரம், யாரோ ஒருத்தர் உதாசீனப்படுத்தினால் அதனால் வருகின்ற வசவும் - திட்டும் கூட என்னைத்தான் வந்து சேரும். எனவே எனக்கு நல்ல பெயராக இருந்தாலும் - கெட்ட பெயராக இருந்தாலும் உங்கள் செயல்பாட்டைப் பொறுத்துதான் அது அமையும்.

உங்களில் யாரும் பொது ஒழுங்கிற்கு மாறாக, பண்பாட்டிற்கு மாறாக நடந்து கொள்ள மாட்டீர்கள் என்று நான் முழுவதுமாக நம்புறேன். நீங்களும் நடுத்தர - ஏழை எளிய - விளிம்பு நிலைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். யாரால் ஆளாக்கப்பட்டு இந்தப் பணியை நீங்கள் அடைந்திருக்கிறீர்களோ அந்த மக்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குரூப்-4 என்பது உங்க முதல் படிதான். இதற்கு அடுத்து மேல் நிலையில் உள்ள தேர்வுகளையும் எழுதி உயர்பொறுப்புகளுக்கு வாருங்கள்.

உங்களால் முடியும்! உங்களால் மட்டுமே முடியும்! உங்களால் முடியாதது வேறு யாராலும் முடியாது என்று இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமில்லை, உங்களுடைய தந்தை நிலையில் இருந்தும் என்னுடைய சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வாழ்த்துகளைச் நிறைவாக, இன்று பணியாணை பெற்றிருக்கும் உங்களுக்கும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக அனைத்து மாண்புமிகு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புறேன். உங்களிடம் கோரிக்கை மனுவுடன் வருகிறவர்களிடம் முதலில் உட்கார வைத்து பேசுங்கள். அவர்களுடைய பிரச்சினையை, கோரிக்கையை காது கொடுத்து கேளுங்கள்.

அதுவே வந்தவர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தரும்; மன நிறைவை தரும்! உட்கார வைத்து பேசுறதுதான், சக மனிதருடைய சுயமரியாதை என்று நினைத்து அதற்கு மதிப்பு கொடுங்கள். அதனால், என்னுடைய இந்தக் கோரிக்கையை எல்லாரும் கடைப்பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படி கேட்டால், அவர்களுடைய பாதி பிரச்சனை தீர்ந்து போய்விடும், பாதியளவுக்கு நிம்மதியை அடைந்துவிடுவார்கள். "இது உங்கள் அரசு தான்" என்பதை உங்களை சந்திக்க வருகிறவர்களிடம் உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+