Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடமான பத்திரம்.. வில்லங்க சான்றிதழ் வில்லங்கம்.. குறுக்கே லதா வேற.. தாம்பரம் ஆபீஸரால் திணறுது சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகா மட்டமான வேலையை பார்த்து, போலீசில் அசிங்கமாக சிக்கியிருக்கிறார், சார் பதிவாளர் மணிமொழியன்.. என்ன நடந்தது சென்னையில்?

நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது.. அதனால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரங்களை போலவே உருவாக்கி, புதுபுது மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Encumbrance Certificate and Fake Land Documents Fraud Fake Deed Registration in Chennai Avadi

ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெற்றால், இனி பத்திரப்பதிவுத்தலைவரே நடவடிக்கை எடுக்கலாம்.. போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம்: அந்தவகையில், போலி பத்திரத்தின் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்க, தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க, http://ecview.tnreginet.net/ என்ற வசதியும் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அதிலும், சில சார் பதிவாளர்களே தவறுகளை செய்து கைதாகி, பொதுவெளியில் அசிங்கப்பட்டுவிடுவார்கள். இதோ சென்னையிலும் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நிலமோசடி: சென்னை தாம்பரத்தில் 3 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணம் மூலம் பதிவு செய்வதற்காக ஒரு கும்பல் முயன்றுள்ளது.. இதற்காக தாம்பரத்தில் சார் பதிவாளராக பணியாற்றிய மணிமொழியனிடம் தொடர்பு கொண்டுள்ளனர்.

அவரும், அவரது உதவியாளர்கள் லதா, சபரீஸ் ஆகியோர் உதவியுடன் போலியான பத்திரத்தை பதிவு செய்து தருவதாக உறுதி தந்துள்ளார்.. அதன்படியே, ரூ.300 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே கிரையம் செய்ததுபோல அடமான பத்திர ஆவணத்தை நீக்கிவிட்டு, கிரைய பத்திர ஆவணத்தை சேர்த்து ஸ்கேன் செய்திருக்கிறார்கள்.. பிறகு, ஈசியிலும் அதை அப்லோடு செய்துவிட்டார்கள்.

கிடுக்கிப்பிடி: இந்த மோசடி விவகாரம் கசிய ஆரம்பித்துவிட்டது.. விஷயம் போலீசுக்கு போனது.. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று போலீசில் கடந்த 2021 செப்டம்பரில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, போலீசார் தாமதப்படுத்தினார்களாம்..

பிறகு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது... எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்ததால், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

அதிரடி கைது: அப்போதுதான், மோசடி நடந்திருப்பது உண்மை என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உதவியாளர்கள் லதா, சபரீஸ் அதிரடியாக கைதானார்கள்.. அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதில், இதுக்கெல்லாம் மூலகாரணம் மணிமொழியன் என்பது நிரூபணமானது.
இந்த மோசடி நடந்தபோது, தாம்பரத்தில் சார் பதிவாளராக மணிமொழியன் பணியாற்றி கொண்டிருந்தார். இப்போது, கோவை கணபதியில் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து, கோவை கணபதிக்கு சென்ற சிபிசிஐடி போலீசார், மணிமொழியனை அங்கேயே வைத்து கைது செய்தனர். இப்போது, புழல் ஜெயிலில் உள்ளார் சார் பதிவாளர்.

வில்லங்க சான்றிதழ்: அதுமட்டுமல்ல, இந்த மோசடியில், நிர்வாக மாவட்டப்பதிவாளர் ரவீந்திரநாத் என்பவரும் வசமாக சிக்கியிருக்கிறார். இவர் 8 முறை வில்லங்க சான்றிதழில் திருத்தம் செய்தாராம்.. எனவே, ரவீந்திரநாத் என்பவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். 300 கோடி ரூபாய் மோசடி விவகாரம் என்பதால், இந்த விவகாரத்தில், மேலும் பல புள்ளிகள் சிக்குவார்கள் என்கிறார்கள்.

உயரிய பதவியில் இருக்கும், சார் பதிவாளர்களும், மாவட்ட பதிவாளர்களுமே, இவ்வளவு பெரிய தவறுகளை "அசால்ட்டாக" செய்து கைதாகியிருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+