138 நகராட்சிகளில் 124ல் திமுக அமோக வெற்றி.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. அதிமுகவுக்கு பூஜ்யம்
சென்னை: தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணி முடிக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் 124 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளதால் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். நகராட்சிகளை பொறுத்தமட்டில் அதிமுகவுக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை. 14 நகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு நிர்வாகத்தை கைப்பற்றுவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்மூலம் 21 மாநகராட்சியில் 1374 உறுப்பினர்கள், 138 நகராட்சிகளில் 3843 உறுப்பினர்கள், 489 பேரூராட்சிகளில் 7621 உறுப்பினர்கள் தேர்வாக இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் 4 மாநகராட்சி உறுப்பினர்கள், 18 நகராட்சி உறுப்பினர்கள், 196 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதனால் மாநகராட்சியில் 1370 உறுப்பினர்கள், நகராட்சியில் 3825 உறுப்பினர்கள், பேரூராட்சியில் 7425 உறுப்பினர்கள் என மொத்தம் 12,620 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட இருந்தனர்.

ஓட்டு எண்ணிக்கை
இந்த உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி 19ல் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஓட்டளித்தனர். 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதிக இடங்களில் திமுக
தமிழக நகர்புற உள்ளாட்சியில் நகராட்சிகளை பொறுத்தமட்டில் மொத்தம் 3825 பேர் தேர்வு செய்யப்பட இருந்தனர். இதில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காலையில் ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர்.
நகராட்சிகளின் 2360 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் 638 வேட்பாளர்களும், பாஜக சார்பில் 56 வேட்பாளர்களும், இந்திய கம்யூனிஸ் கட்சி சார்பில் 19 வேட்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் 41 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் எவ்வளவு
மேலும் நகராட்சிகளில் தேமுதிக வேட்பாளர்கள் 12 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 151 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 வார்டுகளில் வாகை சூடியுள்ளனர். இவர்கள் தவிர நாம்தமிழர், பாமக உள்பட பிற கட்சியினர், சுயேச்சைகள் என 562 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கொண்டாட்டம்
இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் 124 நகராட்சிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் கைப்பற்றியுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மதுராந்தகம், மறைமலைநகர், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், பொள்ளாச்சி, மதுக்கரை, மேட்டுப்பாளையம், வால்பாறை, கடலூர் மாவட்டம் சிதம்பரம், திட்டக்குடி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலூர், விருத்தாச்சலம், தருமபுரி மாவட்டம் தருமபுரி, திண்டுக்கல் மாவட்டம் பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி, புஞ்சை புளியம்பட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, குளச்சல், கொல்லங்கோடு, கரூர் மாவட்டம் குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர், கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை, நாகை மாவட்டம் நாகை, வேதாரண்யம், இராசிபுரம், திருச்செங்கோடு, நாமக்கல், பள்ளிபாளையம், நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், மேல்விஷாரம், வாலாஜாபேட்டை, சேலம் மாவட்டம் ஆத்தூர், இடங்கணசாலை, எடப்பாடி, தாரமங்கலம், நரசிங்கபுரம், மேட்டூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய நகராட்சிகளை திமுக வென்றுள்ளது.

தேனி மாவட்டம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர், சுரண்டை, தென்காசி, புளியங்குடி, தஞ்சை அதிராம்பட்டினம், தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சின்னமனூர், தேனி அல்லிநகரம், போடி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருநின்றவூர், திருவள்ளூர், திருவேற்காடு, பூந்தமல்லி, பொன்னேரி, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருச்செந்தூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம், திருமுருகன்பூண்டி, பல்லடம், வெள்ளக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, திருவத்திபுரம், திருச்சி மாவட்டம் துவாக்குடி, துறையூர், முசிறி, லால்குடி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்தூர், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிகளில் திமுக வாகை சூடியுள்ளது.

அதிமுக ஜீரோ... 14ல் இழுபறி
கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம், அரியலூர் மாவட்டம் அரியலூர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், செங்கோட்டை, தஞ்சை பட்டுக்கோட்டை, தேனி மாவட்டம் பெரியகுளம், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வந்தவாசி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் என 14 நகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன்மூலம் அதிமுக ஒரு நகராட்சியை கூட கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகளில் 15 வார்டுகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. இதுவே நகராட்சி ஒன்றில் அதிமுக பெற்ற அதிக வெற்றியாகும். இங்கு திமுக 14 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கும் பிறருடைய ஆதரவுடன் நிர்வாகத்தை கைப்பற்ற திமுக முயற்சிக்கும் என்பதால் அதிமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொண்டாட்டம்
இதன் மூலம் கடந்த 2011ம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒப்பிடும்போது மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இதனால் திமுக தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் உற்சாக மிகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்கள் முழங்க வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications