ஆபாச போட்டோக்களை வைத்து விஜயதசமி பூஜை.. அடங்காத ‘முரட்டுகுத்து’ டைரக்டர்..!
சென்னை: விஜயதசமி பூஜையின் போது ஆபாச போட்டோக்களை வைத்து முரட்டுகுத்து டைரக்டர் சந்தோஷ் ஜெயக்குமார் பூஜை செய்த சம்பவத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஏதேனும் சர்ச்சைகளை கிளப்பி தம்மை லைம்லைட்டிலேயே வைத்துக் கொள்ள பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். நடிகர், நடிகையர்கள், அரசியல்வாதிகளும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல.
திரைப்படத்துறையில் இது போன்ற லைம்லைட் மோகத்தால் சர்ச்சையை கிளப்புபவர்கள் மக்களிடமும் ரசிகர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொள்வதையும் பார்த்துள்ளோம்.

டிரெய்லர்
அது போன்ற சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கியவர்தான் இளம் இயக்குநரான சந்தோஷ் ஜெயக்குமார். இவரது இயக்கத்தில் வெளிவந்த படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து ஆகும். இந்த படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த படத்தில் டைட்டில் முதல் டிரெய்லர் வரை எல்லாமே டபுள் மீனிங்தான்.

ஹாலிவுட் திரைப்படம்
இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ஹேண்ட்ஜாப் கேபின் எனும் டிரெய்லரை தழுவி உருவானது. இந்த படம் இளைஞர்களை குறிவைத்தே எடுக்கப்பட்டது. இதில் பாடல்களும் டபுள் மீனிங்தான். முதல் படத்திற்கே எதிர்ப்பு வலுத்த நிலையில் தற்போது இரண்டாம் குத்து என்ற படத்தை இந்த டைரக்டர் இயக்கி வருகிறார்.

இரண்டாம் குத்து படத்தின் டீசர்
அண்மையில் இரண்டாம் குத்து படத்தின் டீசர் வெளியானது. இதை பார்த்த இயக்குநர் பாரதிராஜா, இந்த விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். எத்தனை நல்ல குடும்பங்கள் இதை பார்க்கக் கூசியிருக்கும் என அறிக்கை விட்டிருந்தார். இதற்கு பதிலடியாக சந்தோஷ் ஜெயக்குமார் பாரதிராஜா இயக்கிய "டிக் டிக் டிக்" பட போஸ்டரை பதிவிட்டு, "டி க் டிக் டிக்" கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ என பதிவிட்டிருந்தார்.

நெட்டிசன்கள் எதிர்ப்பு
இதற்கு ரசிகர்கள், நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஒரு வழியாக சந்தோஷ் ஜெயக்குமார், பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டார். இப்படிப்பட்ட நிலையில் சந்தோஷ் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். விஜயதசமி 2020 நல்வாழ்த்துகள் என்ற ஹேஷ்டேக்குடன் அவர் தெரிவித்த வாழ்த்து தற்போது வம்பாக மாறியுள்ளது.

அரைகுறை புகைப்படம்
விஜயதசமி வாழ்த்துடன் இணைக்கப்பட்ட புகைப்படத்தில் நடிகர் டேனியலுடன் இருக்கிறார் சந்தோஷ். கைகளில் விபூதி, காதுகளில் பூ வைத்துக் கொண்டு இருவருமே பக்தி மார்க்கமாக இருக்கிறார்கள். ஆனால் அவர் பூஜை செய்துள்ளது ஆபாச புகைப்படங்களுக்கு என்பது அவர் வெளியிட்டுள்ள பதிவில் இருந்து தெரிகிறது. அந்த அரைகுறை ஆபாச புகைப்படம் முன்பு பழம், வாழை இலையில் பொறி கடலை, தீபாராதனையுடன் பூஜை செய்யும் போட்டோ வைரலாகி சர்ச்சையில் சிக்கியுள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications