Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குழந்தை விரல் கருப்பு கலரில் மாறிடுச்சு.. ஆனா நர்ஸ் சேரில் இருந்து கூட எழுந்திரிக்கல!" தாயார் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தையின் கை அழுகிய விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் கை இப்போது அகற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர். இவருக்குத் திருமணமாகி 1.5 வயதில் குழந்தை இருக்கிறது இந்த குழந்தைக்கு திடீரென தலையில் இருந்து நீர் வந்ததால் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்,

 My child lost his hand as due Nurse negligence says mother of child whose hand rotten

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கே குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

குழந்தைக்குச் சிகிச்சை: கடந்த 2 நாட்களுக்கு முன்பு, குழந்தைக்குக் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டுள்ளது. இடது கையில் போடப்பட்ட டிரிப்ஸ் பல்ஜ் ஆன நிலையில், வலது கையில் போட்டுள்ளனர். அப்போது அரை மணி நேரத்தில் குழந்தையின் கை திடீரென சிவப்பாக மாறியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர் இது குறித்து செவிலியர்களிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதனால் எந்தவொரு பாதிப்பும் இல்லை எனச் செவிலியர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும், கை மேலும் மேலும் சிவப்பாக மாறியுள்ளது. குழந்தை அதிகமாக ஆழத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அங்கிருந்த செவிலியரிடம் கூறிய போதிலும், அவர் இதனால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றே தொடர்ந்து கூறியுள்ளார். கை கொஞ்ச நேரத்திலேயே சிவப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறத்தில் மாறியுள்ளது. கை மேலும் அழுகிய நிலையில், மருத்துவர்கள் குழந்தையின் கையை அகற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

கருப்பாக மாறிய கை: இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், கை அழுகியுள்ளதால் கையை அகற்ற வேண்டும் என்றே தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று மதியம் குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில், குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் வலது கை அகற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே மருத்துவர்கள் யாரும் அங்கே இல்லாமல் போனதும் செவிலியர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எனது குழந்தைக்குத் தலையில் நீர் இருந்ததாக ஆப்ரேஷன் செய்திருந்தார்கள். அந்த டியூப் எதிர்பாராத விதமாக வெளியே வந்துவிட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

என்ன நடந்தது: ஆப்ரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில், எனது குழந்தை ஒரு வாரம் அங்கே தான் இருந்தது. சிகிச்சை முறையாகவே அளித்து வந்தனர். அப்போது இடது கையில் போடப்பட்ட டிரிப்ஸ் பல்ஜ் ஆன நிலையில், வலது கையில் டிரிப்ஸ் போட்டார்கள். அப்போது வழக்கத்திற்கு மாறாகக் குழந்தை கத்தினான். அப்போதே நான் என்னவென்று பார்க்கச் சொன்னேன். இருப்பினும், எந்த பிரச்சினையும் இல்லை எனச் செவிலியர் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். அவர் டிரிப்ஸ் சரியாகப் போட்டாரா எனத் தெரியவில்லை.

இது நடந்து 30 நிமிடத்தில் குழந்தையின் கை விரல்கள் சிவப்பு நிறத்தில் மாற தொடங்கியது. நான் செவிலியரிடமே சென்று இது குறித்துச் சொன்னேன். அவர் சேரை விட்டு எழுந்து கூட வரவில்லை. தொடர்ந்து அதெல்லாம் பிரச்சினை இல்லை என்றே கூறினார். அப்போது அந்த வார்டில் மருத்துவர்கள் யாரும் இல்லை. செவிலியர்களும் கூட மற்ற யாருமே இல்லை. அவர் ஒருவர் மட்டுமே இருந்தார். 3 முறை நான் கேட்டேன். குழந்தையையும் கூட தூக்கிச் சென்று கேட்டேன். அப்போதும் கேட்டேன். அவர் நன்றாகவே இருப்பதாகக் கூறினார்.

 My child lost his hand as due Nurse negligence says mother of child whose hand rotten

அழுகிய கைகள்: அதன் பின்னரே குழந்தையின் கை முழுக்க அழுகியது. இப்போது எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தையின் வலது கையை நீக்கியுள்ளனர். அவர்களின் அலட்சியமே இந்தச் சம்பவத்திற்குக் காரணம். இதேபோல மற்ற குழந்தைகளுக்கு நடக்கக் கூடாது என்பதற்காகவே இதை நான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+