அப்பாவுக்காக நானும் தங்கை செல்வியும் சேர்ந்து நிலம் வாங்கினோம்! ஸ்டாலின் கூறும் ஃபிளாஷ்பேக்!
சென்னை: கலைஞர் கோட்டம் கட்டுவதற்கான நிலத்தை தானும் தனது சகோதரி செல்வியும் சேர்ந்து வாங்கியதாக கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இது தொடர்பான ஃபிளாஷ்பேக்குடன் அவர் எழுதிய கடிதத்தின் குறிப்பிட்ட பகுதி வருமாறு;
''திருவாரூரில் உயர்ந்து நிற்கிறது கலைஞர் கோட்டம். கடந்த 2018-ஆம் ஆண்டு நானும் எனது சகோதரி திருமதி. செல்வி செல்வம் அவர்களும் அந்த நிலத்தை வாங்கினோம். பின்னர், அதனை தயாளு அம்மாள் அறக்கட்டளைக்குக் கொடுத்தோம். எனது அன்னை பெயரிலான அந்த அறக்கட்டளையை நிர்வகிக்கும் அறங்காவலர்களான மருத்துவர் திரு. மோகன் காமேசுவரன் அவர்களும், திரு. சம்பத்குமார் அவர்களும் கலைஞரின் புகழ்ப் போற்றும் அந்த எழில் கோட்டையாம் 'கலைஞர் கோட்டத்தை' உருவாக்கியுள்ளார்கள்.

மாவட்டக் கழகச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. விழா ஏற்பாடுகளைக் கச்சிதமாக செய்து, போக்குவரத்து நெருக்கடியோ, பொதுமக்களுக்கு இடையூறுகளோ இல்லாத வகையில் விழாவை நடத்திக் காட்டியிருக்கிறார்.
பொதுப்பணித்துறை -நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஒட்டுமொத்த கோட்டத்தின் கட்டுமானத்தையும் கவனமுடன் மேற்பார்வையிட்டு அதன் எழிலை உறுதிசெய்திருக்கிறார்.
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு - வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் விழா நாளில் ஒருங்கிணைப்புப் பணிகளை நல்ல முறையில் மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டக் கழக நிர்வாகிகள், பிற மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் எனப் பலருடையை ஒத்துழைப்பும் நேற்றைய விழாவை வெற்றிகரமாக்கியது.
திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசை, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையிலான கவியரங்கம், நடுவர் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றம், இன்னிசை வழங்கிய மாலதி லட்சுமன் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலையில் தொடங்கி மாலைவரை முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத்தன்மையை எடுத்துரைத்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தேன் சுவை!
நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, பீகார் மாநில துணை முதலமைச்சர் திரு.தேஜஸ்வி அவர்கள் வருகை தந்து திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்ததுடன், இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் காப்பதற்கு முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கை எப்படி துணையாக நின்று வழிகாட்டுகிறது என்பதை விளக்கினார்.
உடல்நலக்குறைவால் அன்பிற்குரிய பீகார் முதலமைச்சர் திரு.நிதீஷ்குமார் அவர்களால் வர இயலாவிட்டாலும், தன் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் உரையாக எழுதி, இந்திய அரசியல் களத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் இன்றும் எப்படி வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்பதை விளக்கியிருந்தார். அதன் தமிழாக்கத்தை திருச்சி சிவா எம்.பி., அவர்கள் உணர்வுபூர்வமாக உடன்பிறப்புகளிடம் எடுத்துரைத்தார்.
கலைஞர் கோட்டத்தைத் திறக்கின்ற பெரும் வாய்ப்பு எனக்கு வாய்த்த நிலையில், கோட்டத்தினைப் பார்வையிட்ட சிறப்பு விருந்தினர்கள், கழக நிர்வாகிகள் எல்லாரும் கண்கள் விரிந்திட, கலைஞரின் பேராற்றலைக் கண்டு வியந்தனர். 'சாதாரண மனிதர்களிடமிருந்துதான் ஒரு சகாப்தத்தின் விடிவுக்கான ஒளி கிளம்புகிறது' என்கிற தலைவர் கலைஞரின் பொன்மொழியே அவரது வாழ்க்கையாகவும் அவரது நூற்றாண்டு செய்தியாகவும் அமைந்திருப்பதை அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்கள் - ஆவணங்கள் வாயிலாக அறிகின்ற யார்தான் ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?
தன் வாழ்வின் நிகழ்வுகளையும், அதன் வழியே தமிழ்நாடு - இந்திய அரசியல் செய்திகளையும் நெஞ்சுக்கு நீதியாக எழுதி ஆவணப்படுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர். எழுத்தின் எல்லாப் பரிமாணங்களிலும் தன் படைப்புகளை வெற்றிகரமாக வழங்கியவர். அவருடைய நூல்களைக் கொண்டே ஒரு நூலகம் அமைக்க முடியும். கோட்டத்தில் தலைவர் கலைஞரின் தந்தை முத்துவேலர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் திறந்து வைத்தார். அது நூலகமாக மட்டுமில்லாமல், முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கைக்கான ஆவணக் காப்பகமாகவும் திகழும். எதிர்காலத் தலைமுறையினருக்கு, இரு நூற்றாண்டை ஆண்ட தலைவரின் பெருமையைச் சொல்லும்.
காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு செயல்பட்டவர் கலைஞர். நாடகம் முதல் ஊடகம் வரை அவரது படைப்புகள் தொடர்ந்தன. பேருந்து முதல் மெட்ரோ ரயில்வரை அவரது திட்டங்கள் தொடர்ந்தன. உழவர் சந்தையும் தந்தார்; டைடல் பார்க்கும் தந்தார். அவரது கோட்டத்திலும் நவீனத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான செல்ஃபி பாயிண்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு நாற்காலிகள் காலியாக இருக்கும். ஒரு நாற்காலியில் நாம் உட்கார்ந்து, பக்கத்தில் உள்ள நாற்காலியைப் பார்த்து வணங்கலாம், புன்னகைக்கலாம். அந்த நொடியில் எடுக்கப்படும் ஃபோட்டோ, சில நொடிகளில் பிரிண்ட் போடப்பட்டு நம் கைக்கு வரும்போது, நமக்கு பக்கத்தில் கலைஞர் உட்கார்ந்திருப்பார். Augmented Reality என்ற புதிய தொழில்நுட்பத்தின் விளைவு இது.
கலைஞரை நேரில் பார்க்க வாய்ப்பில்லாத தலைமுறையினர், இந்தக் கோட்டத்திற்கு வந்து அவரது வாழ்க்கை வரலாற்றை, சளைக்காத போராட்டத்தை, தொலைநோக்குத் திட்டங்களை, நிகரற்ற படைப்பாற்றலைத் தெரிந்து கொள்ளும்போது, இப்படிப்பட்ட அற்புதத் தலைவரைப் பார்க்காமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்தைத் தணிக்கும் வாய்ப்பு இது.''
-
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications