கண்ணீரும் கம்பலையுமாக போலீசில் புகார் கொடுத்த விஜயலட்சுமி.. சீமானின் “ஒற்றை வரி” சிரிப்பு பதில் இது!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி மீண்டும் சென்னை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு சீமான் ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகை விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக சீமான் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்து வருகிறார். சீமானின் முதல் மனைவி தாமே என்றும் தம்முடன் நெருக்கமாக சீமான் இருக்கும் பட்ங்களையும் விஜயலட்சுமி வெளியிட்டிருந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் சீமான் மீது போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார் நடிகை விஜயலட்சுமி.

தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருக்கு சீமான் ஆதரவாளர்கள் துரத்திவிட்டதாகவும் தாம் நீதிக்கு போராடி வருவதாகவும் சமூக வலைதள வீடியோக்களில் கூறி வந்தார் விஜயலட்சுமி. இந்நிலையில் சென்னையில் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி மீண்டும் புகார் கொடுத்தார். அப்போது தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமியும் விஜயலட்சுமியுடன் இருந்தார். இந்த புகாரில் சீமானுக்கு எதிரான பல ஆதாரங்களையும் விஜயலட்சுமி போலீசில் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி, தம்மையே மனைவி என்றும் தற்போதைய மனைவி கயல்விழியை துணைவி என்றுதான் சீமான் நம்ப வைத்தார். ஆனால் என்னை ஏமாற்றிவிட்டார் சீமான். ஆகையால் எனக்கு தமிழ்நாட்டு மக்களும் அரசும் நீதி வழங்க வேண்டும். சீமானை சிறையில் தள்ள வேண்டும் என கண்ணீரும் கதறலும் கம்பலையுமாக கூறினார்.
நடிகை விஜயலட்சுமியின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறாரே? என்றனர் செய்தியாளர்கள். இதற்கு சிரித்தபடி பதிலளித்த சீமான், ஆமாம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் இதுதான் பதில் என கூறினார். நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் பொதுவாக சீமான் பட்டும் படாமலுமே பதில்களை கூறி வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications