ஒருநாள்.. இந்த நிலம் எனக்கு சிக்குச்சு.. நீ செத்த.. இலங்கைக்கு சீமான் ஆவேச எச்சரிக்கை!

லோக்சபா தேர்தலுக்கு பின் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் இருக்கும், வேறு கட்சியே இருக்காது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இலங்கைக்கு சீமான் ஆவேச எச்சரிக்கை!-வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலுக்கு பின் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் இருக்கும், வேறு கட்சியே இருக்காது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருக்கிறார்.

    லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அதேபோல் நாம் தமிழர் கட்சி 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் இதற்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சீமான் பேசினார். அனைத்து கட்சிகளையும் தாக்கி பேசிய அவர், மிக கோபமாக விமர்சனங்களை வைத்தார்.

    சீமான் பேச்சு

    சீமான் பேச்சு

    நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பேச்சில், எங்களுக்கு பல தடைகள் இருக்கிறது. சாதியை தகர்த்து சென்று, சினிமா கவர்ச்சியை தகர்த்துவிட்டு, மதத்தை தூக்கி எறிந்துவிட்டு, சாராயமும் கொடுக்க மறுத்து, பணத்திடம் சிக்கிவிடுகிறோம். பணம் மழை பொழிந்து எங்களை தடுத்துவிடுகிறது. பணம் எங்கள் வெற்றியை பறிக்கிறது. பணத்திற்கு முன் நாங்கள் தெரிவதில்லை. நாம் தோல்வி அடைகிறோம்.

    தேர்தல்

    தேர்தல்

    முதல் அறிக்கையையே மீண்டும் தேர்தல் அறிக்கையாக திமுக வெளியிட்டு இருக்கிறது. பாஜக தமிழுக்கு எதிரி அவர்களுடன் அதிமுக கூட்டு. காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரி ஆனால் அவர்களுடன் திமுக வெட்கமே இல்லாமல் கூட்டு. இவர்கள் ஒருமாதிரி இருக்கிறார்கள், அவர்கள் ஒருமாதிரி இருக்கிறார். நாங்கள்தான் மக்களின் தேர்வு.

    என்ன காமெடி

    என்ன காமெடி

    நாங்கள்தான் இனி எல்லாம். நீங்கள் எல்லாம் முதல்வராக போவதாக பேச வேண்டும். நீங்கள் எங்களை வைத்து காமெடி, கீமிடி பண்ணவில்லையே. ஒரு பைன் மார்னிங் கதவை திறந்து இவர்களை எல்லாம் இந்த ஊரைவிட்டு அனுப்புவேன். நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள். மொத்தமாக இவர்களை ஊரை விட்ட ஓட விடுவேன்.

    கமல்

    கமல்

    இந்த தேர்தலுக்கு பின் நாங்கள் மட்டும்தான் இருப்போம். எங்களை சுற்றி மட்டும்தான் அரசியல் நடக்கும். எங்களை மையப்படுத்திதான் இனி எல்லாமே. மையத்தைப்படுத்தி கிடையாது. நாங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது ராஜா இங்கே.

    நீ செத்த

    நீ செத்த

    இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தார்கள். யாரும் கேட்கவில்லை. ஒருநாள்.. என் தமிழ் மீது, என் தாய் மீது, என் தலைவன் மீது சத்தியமாக சொல்கிறேன்.. இந்த நிலம் எனக்கு சிக்கிச்சு.. நீ செத்த, என்று சீமான் மிகவும் ஆவேசமாக இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+