சேட்டை கூடாது..சின்னம் பறிப்பு- அயோத்தி ராமர் கோவிலில் சத்தியம் செய்யலாமா? அண்ணாமலைக்கு சீமான் சவால்
சென்னை: தேர்தல் சின்னம் பறிக்கப்பட்டது தொடர்பாக ராமர் கோவிலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தம்முடன் சேர்ந்து சத்தியம் செய்ய தயாராக இருக்கிறாரா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது இந்திரா காந்தி அம்மையார். அப்போது ஆட்சியில் இருந்த திமுக, ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என அஞ்சி சரணடைந்துவிட்டது. எங்களுடைய தாத்தா மூக்கையாத்தேவர் மட்டும்தான் எதிர்த்து குரல் கொடுத்தார்.

நாட்டை ஆளும் பிரதமரே கச்சத்தீவு பற்றி 'அண்ணாமலை' தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளை வைத்து பேசுகிறார் என்பது எப்படி சரியாகும்? அப்படியானால் நீங்க எந்த லட்சணத்தில் எங்களை ஆட்சி செய்திருக்கிறீர்கள்? இதை ஒவ்வொரு குடிமகனும் கேட்கனுமா இல்லையா? இன்னும் எத்தனை நாளைக்கு டோல்கேட் வசூல் என தகவல் கேட்டேன் கொடுத்தீங்களா? குஜராத் கலவரத்தில உண்மையிலேயே என்ன நடந்ததுன்னு கேட்கிறேன் தகவல் தருவீங்களா? மணிப்பூரில் உண்மையிலேயே கலவரத்துக்கு காரணம் என்ன? எத்தனை பேர் செத்து போனாங்க.. சொல்வீங்களா?
இப்பவும் ஒன்றும் ஆகலை.. கச்சத்தீவை மீட்டு கொண்டு வந்துவிடுங்கள்.. ஏப்ரல் 19-ந் தேதிக்குள் அதை செய்துவிடுங்கள்.. உங்களுக்கே நாங்கள் ஓட்டையும் போட்டுவிடுகிறோம்.
கரும்பு விவசாயி சின்னம் விவகாரத்தில் அண்ணாமலையை வரச் சொல்லுங்க.. அண்ணாமலை ஜெய் ஸ்ரீராம் என சொல்லுகிற ராம பக்தன்தானே.. நாம இரண்டு பேரும் ராமர் கோவிலுக்குப் போவோம்.. நீதான் என் சின்னத்தை பறிச்ச ஆளுன்னு நான் சத்தியம் செய்றேன். அதே ராமர் மேல எனக்கும் கரும்பு விவசாயி சின்னத்தை பறிச்சத்துக்கும் தொடர்பே இல்லைன்னு சத்தியம் செய்.. நான் கட்சியையே கலைச்சுருவேன்.. வா..ரெண்டு போரும் அயோத்திக்கு போவோமா? ராமரைத்தான் நீ பிக் கடவுள்னு நம்பிகிட்டு இருக்க.. வா போவோம்.. இந்த சேட்டை எல்லாம் வெச்சுக்கக் கூடாது.. 5 வயசில் இருந்து அரசியல் பண்றவன் நான்.. சிவகங்கை கலெக்டர் ஆபிசுக்கு 5 வயசில் கம்யூனிஸ்டு கொடி பிடிச்சுகிட்டுப் போனவன் நான்.. என் கிட்ட இப்படி எல்லாம் பேசக் கூடாது. இவ்வாறு சீமான் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications