‘அவரை’ கழட்டி விட்டுடுவாங்க..அண்ணாமலை டெல்லியோட காவடி தூக்கும் அடிமை! பொரிந்து தள்ளிய சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஈழத் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியால் தான் நன்மை செய்ய முடியும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடன் சேர்ந்து போராடுவார் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில் அண்ணாமலை ஒரு அடிமை என சீமான் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்

இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியால் தான் இலங்கையில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை தொடர்ந்து பல நாட்களாகக் பல்வேறு நிகழ்ச்சிகளில் கூறி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை சென்ற அண்ணாமலை அங்கு வசிக்கும் இலங்கை வாழ் தமிழர்களை சந்தித்துப் பேசியதோடு, விரைவில் ஈழத்தமிழர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என கூறினார்.

Recommended Video

    Seeman Speech | பொரிந்து தள்ளிய சீமான் | Annamalai | Sattai Durai Murugan | *Politics
    பாஜக அண்ணாமலை

    பாஜக அண்ணாமலை

    இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,"சீமானுக்கு அவரது கட்சியை முதலிடம் கொண்டுவர ஆசை இருப்பதுபோல , பாஜகவை முதலிடம் கொண்டு வர எனக்கும் ஆசை இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீமான் எங்களது பக்கம் சாய்ந்து தனது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சித்தால் கூட சரியான முடிவாகவே இருக்கும். இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும் என்பது சீமானுக்கும் தெரியும்" என பேசினார்.

    நாம் தமிழர் சீமான்

    நாம் தமிழர் சீமான்

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்," பாஜக தமிழக தமிழக தலைவரான அண்ணாமலை டெல்லிக்கு காவடித் தூக்கும் ஒரு அடிமை எனவும், 8 ஆண்டுகளாக ஈழத்தை பற்றி பேசாத பிரதமர் நரேந்திர மோடி இப்போது பேசப் போகிறாரா என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடன் சேர்ந்து போராடுவார் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் ஆவேசமான சீமான் இவ்வாறு கூறியிருக்கிறார்.

    டெல்லி அடிமை

    டெல்லி அடிமை

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்," "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரே முதலாளி போல பேசி வருகிறார். அவர் டெல்லிக்கு காவடித் தூக்கும் ஒரு அடிமை. ஈழத்தை பெற்றுக் கொடுப்பேன் என அமித் ஷா, நரேந்திர மோடி என்னிடம் கூற வேண்டும். 8 ஆண்டுகளாக ஈழத்தை பற்றி பேசாத பிரதமர் நரேந்திர மோடி இப்போது பேசப் போகிறாரா..

    விடுதலை புலிகள் தடை

    விடுதலை புலிகள் தடை

    திடீரென தன்னுடன் வந்து சீமான் போராடுவார் என பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். ஒருவேளை பாஜக - திமுக கூட்டணி அமைக்க முடிவெடுத்தால் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்றி விட்டு அந்த தலைவர் பதவிக்கு வேறு ஒருத்தரை நியமிச்சுருவாங்க. அவ்வளவு தான் அண்ணாமலையின் இருப்பு. திடீரென அவருக்கு இலங்கை தமிழர்கள் மீதும் ஈழத்தின் மீது பாசம் வந்துள்ளது. அவர் வேறெதும் செய்ய வேண்டாம், விடுதலை புலிகள் மீதான தடையை மட்டும் நீக்குங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்." என ஆவேசமாக பதிலளித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+