Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புஷ்..சீமானுக்கு எதிராக ஒரு பஞ்சாயத்தும் இல்லையாம்! மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை போல அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் நள்ளிரவில் போட்ட ட்வீட் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வெற்றிக்குமரன் விளக்கம் அளித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி தொடங்கிய காலம் முதல் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சீமானுடன் தொடர்ந்து பயணிக்கின்றனர். பெரும்பாலனவர்கள் அடுத்தடுத்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வெவ்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகளில் இணைவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Naam Tamilar Senior leader Vetrikumaran revolt against Seeman?

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது முதலே ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் கூட பெற முடியாத நிலைமைதான் உள்ளது. ஆனாலும் சீமான் நம்பிக்கை தளராமல் 2021-ம் ஆண்டு நாம் தமிழர் அரசு அமையும் என்றார்; பின்னர் 2026-ல் நாம் தமிழர் அரசு அமையும் என்கிறார். நாம் தமிழர் அரசு அமைந்தால் 6 மாதத்தில் தனித் தமிழீழம் அமைத்து தருவோம் என்றார்; பின்னர் நாம் தமிழர் அரசு அமைந்தால் பன்னாட்டு சமூகத்துக்கு நெருக்கடி தருவோம் என்றார்.

Naam Tamilar Senior leader Vetrikumaran revolt against Seeman?

அதேபோல ஜாதி ஓட்டு தமக்கு தீட்டு என்றார். ஆனால் ஜாதிய தலைவர்களைப் போற்றுவதை நாம் தமிழர் கட்சி வழக்கமாக வைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஜாதி என்பதற்கு குடி என சூட்டி, குடிப்பெருமை பேசுவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி வருகிறார் சீமான்.

தமிழ்த் தேசியம் என்பது பொதுவாக தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டும் என்ற கொள்கையை கொண்டது; ஆனால் தாம் பேசும் தமிழ் தேசியம் அதனை தவிர்த்த ஒன்று என்கிறார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராதல் என்பது தமிழ்நாட்டில் நெடுநாளைய சமூக நீதிக் கொள்கை. ஆனால் கோவில் கருவறையில் தமிழ் மொழி முதலில் ஒலிக்கட்டும்; மற்றதை அப்புறம் பார்க்கலாம் என்கிறார். இத்தகைய நிலைப்பாடுகளால் நாம் தமிழர் கட்சியில் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

Naam Tamilar Senior leader Vetrikumaran revolt against Seeman?

சீமானின் அத்தனை செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் உடன் இருப்பவர் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன். ஆனால் கடந்த சில செய்தியாளர்கள் சந்திப்பில் வெற்றிக்குமரன் சீமானுடன் இல்லாதது குறித்து கேள்விகள் எழுந்தன. இதற்கு நாம் தமிழர் கட்சியில் விளக்கங்களும் தரப்பட்டன.

Naam Tamilar Senior leader Vetrikumaran revolt against Seeman?

இந்நிலையில் நேற்று இரவு வெற்றிக்குமரன் தமது ட்விட்டர் பக்கத்தில் அரசியலில், கொள்கை லட்சியம் தவிர்த்து வேறு எந்த எதிர்பார்ப்புமற்றவனுக்கு கூனிக்குறுகி, மண்டியிட்டு, அவமானங்களைச் சகித்து வாழவேண்டிய அவசியம் கிடையாது என பொத்தாம் பொதுவாக ஒரு பதிவை போட்டிருந்தார். எதற்காக இப்படி திடீரென வெற்றிக்குமரன் இந்த பதிவை போட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் வெற்றிக்குமரனின் ட்விட்டர் பக்கத்தில் எழுதப்பட்ட பின்னூட்டங்கள், அவர் மன வருத்தத்தில் இருப்பதை வெளிப்படுத்துவதாகவே பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வெற்றிக்குமரன் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் தந்துள்ளார். அதில், என் அண்ணன் செந்தமிழன் சீமானின் கருத்து தான் இது. ஒரு கருத்து போட்டா, நல்லா இருந்தா ரசிங்க. இல்லைனா கருத்து தவறுன்னு சொல்லுங்க. அவனவன் தேவைக்கு பொறுத்தி அர்த்தப்படுத்தி...? என எழுதியுள்ளார். இதனால் நாம் தமிழர் கட்சியில் பஞ்சாயத்து எதுவும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+