Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழ்நாள் போராளி நல்லகண்ணு ஆசைப்படி.. அவரது உடல் மருத்து ஆய்வுக்கு ஒப்படைக்கப்படும்.. வீரபாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லகண்ணு இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், "நல்லகண்ணு ஆசைப்படி அவரத் உடல் சென்னை மருத்து கல்லூரியில், மருத்துவ ஆய்வுக்காக நாளை மாலை ஒப்படைக்கப்படும், இன்று மாலை 5 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கம்யூனிஸ்டு அலுவலகத்தில் உடல் வைக்கப்படும்" என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

Nallakannu Body to Be Donated for Medical Research as per His Wish Says Veerapandian

மறைந்தார் நல்லகண்ணு

சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலையிலும் கம்யூன்ஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் நேரில் சந்தித்தார். இதேபோன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யும் நல்லகண்ணு குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மதியம் 1.55 மணியளவில் நல்லகண்ணு காலமானார். அவர் உயிரிழந்த செய்தி அறிந்து கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள், தலைவர்கள் கலங்கிப் போயினர். தமிழக அரசியல் தலைவர்களும் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கட்சி அலுவலகத்தில் உடல்

நல்லகண்ணு தனது இறப்புக்கு பிறகு உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்க வேண்டும் என 2016ஆம் ஆண்டுதெரிவித்திருந்தார். இதன்படியே நாளை பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது. தற்போது நல்லகண்ணுவின் உடல் அஞ்சலிக்காக தி. நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

தலைவர்கள், அரசியல் கட்சியினர், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கடைசி நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கூறினார். அவர் கூறியதாவது:-

அவர்களால் முடிந்த அளவுக்கு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்கள் முத்தரசன், பெரியசாமி, சுப்பராயன், டாக்டர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என எல்லாரும் சேர்ந்து அவரது உடலை கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க முடிவு எடுத்து இருக்கிறோம்.

பின்னர் அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஊர்வலமாக நல்லகண்ணு உடலை எடுத்து சென்று சென்னை மருத்துவமனையில் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. அவரது ஆசைப்படியே உடல் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ ஆய்வு மேற்கொள்வதற்காக ஒப்படைக்கப்படும். மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவரும் அவர்களால் முடிந்த அனைத்து சிகிச்சைகளையும் வழங்கினர். உயிரை காப்பாற்ற பாடுபட்டனர். மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களுக்கு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

எந்தவித பாகுபாடும் இன்றி

ஆர் நல்லகண்ணு அருகில் ஏழை, எளிய மக்களும் இருந்தனர். அவர்கள் உயிரை காப்பாற்றவும் எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து உதவிகளையும் மருத்துவர்கள் செய்து வருகிறார்கள். நல்லகண்ணுக்கு எந்த அளவு சிகிச்சை வழங்கப்பட்டதோ அதே அளவுக்கு ஏழை, எளிய மக்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இப்படியொரு மருத்துவமனை உள்ளது. மருத்துவர்களும் அப்படி பணிபுரிகிறார்கள். அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக அரசுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+