"இந்த ஊரே எங்களுக்கு வேணாம்டா”.. ஈக்கள் தொல்லையால் அலறும் திருச்செங்கோடு பகுதி கிராம மக்கள்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கட்டிப்பாளையம் கிராமத்தில் ஈக்கள் பிரச்சனையால் அங்குள்ள மக்கள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு வேறு இடத்துக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கட்டிப்பாளையத்தில் 20க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கோழிப்பண்ணைகளால், அப்பகுதி முழுவதும் ஈ தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கோழிப் பண்ணைகளில் கோழிக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அதில் உற்பத்தி ஆகும் ஈக்கள், அப்பகுதியில் பரவியுள்ளன.

ஈக்கள் கட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து கொள்கின்றன. குறிப்பாக, குடியிருப்புகளில் உள்ள உணவுப் பொருட்களின் மீது அவை சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால், பல்வேறு தொற்று நோய் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் உள்ளாவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஈக்கள் தொல்லையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடியிருப்புகளை காலி செய்து செல்லும் அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஈக்களை கட்டுப்படுத்த, கோழிப்பண்ணைகளில் அதற்குரிய மருந்து தெளிக்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், "திருச்செங்கோடு தாலுகா, மரப்பரை கிராமம் அடுத்த கட்டிபாளையம் பகுதியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் ஊரை சுற்றிலும், 20க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. அதனால் ஊர் முழுவதும் ஈக்கள் அதிகரித்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
தண்ணீர் மற்றும் உணவு பொருட்களில் மொய்க்கும் ஈக்களால் குழந்தைகள், முதியவர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனர். எனவே, ஈக்கள் வராமல் தடுக்கும் வகையில். கோழிப்பண்ணைகளிலும், அனைத்து வீடுகளுக்கும் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications