ஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு!
நரகாசுரனுக்கு பெற்றோர் கண்டித்துடன் வளர்த்திருக்கலாமே?
சென்னை: இந்த நரகாசுரனை அவங்க அம்மா பூமாதேவி அடிச்சி வளர்த்திருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?
வருஷம் ஆனா எவ்வளவு செலவு தீபாவளிக்கு? அதுவும் இந்த வருஷம் எவ்வளவு கட்டுப்பாடுகள்? இப்படித்தாங்க இப்பெல்லாம் நமக்கு யோசிக்க தோணுது.

சேட்டை
பெத்த அம்மா கையாலதான் சாவுன்னு வரம் வாங்கி வெச்சிக்கிட்டு, இந்த நரகாசுரன் அன்று ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கேள்வி கேட்க யாரும் இல்லை. அதான் இஷ்டத்துக்கு சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. எல்லாருக்கும் டார்ச்சர் வேற.

புது ஆசை
கடவுளர்களின் 16 ஆயிரம் பொண்ணுங்களை கடத்திட்டு வந்து சிறை வெச்சு அந்த அமர்க்களம் வேற தனியா நடந்தது. ஒரே விளையாட்டுதனம்!! கடைசியில அவங்க அம்மா வந்து அவரை கொல்ல வேண்டியதா போச்சு. அப்படிதான் அவரை கொன்னாங்களே... அதோடு விஷயம் முடிஞ்சா பரவாயில்லையே... கொன்னுட்டா, அதை கொண்டாடனும்னு புதுசா ஆசைவேற வந்திருக்கு.

எவ்வளவு செலவு?
அப்போ கொண்டாட ஆரம்பிச்சதுதான் இந்த தீபாவளி. அவங்க எல்லாம் வசதியா இருந்தாங்க.. கொண்டாடினாங்க. இப்ப நாம அப்படியா இருக்கோம்? தீபாவளி ஆனா எவ்வளவு செலவு ஆகுது? துணிமணிகள், பட்டாசுன்னு செலவு எகிறி போயிடுது. சரி அதையும் மீறி கடன்பட்டு பட்டாசு வாங்கினா அதை வெடிக்க கூடாதுனு ஒரு ஆர்டர் வந்திடுச்சு. மீறினால் 6 மாசம் ஜெயிலாம்!!

அட்வைஸ் பண்ணியிருக்கலாமே?
பேசாம இந்த நரகாசுரன் ஒழுக்கமா இருந்திருக்கலாமே? அவங்க அப்பா கிருஷ்ணர் அட்வைஸ் பண்ணி திருத்தி இருக்கலாமே?-ன்னு தோணுது. அம்மாவும், அப்பாவும் குணமா நரகாசுரனுக்கு எடுத்துசொல்லி இருந்தா இப்படி இன்னைக்கு பயந்து பயந்து தீபாவளி கொண்டாடற நிலைமை வந்திருக்குமா?

ஹேப்பி தீபாவளி
என்ன பண்றது, நமது வீடுகள் இருக்கும் பொருளாதார சூழலில் நரகாசுரன் ஒழுங்கா இருந்திருந்தால் இந்தப் பஞ்சாயத்தெல்லாம் வந்திருக்காதே என்று நினைக்கத் தோன்றுகிறது. எல்லோருக்கும் ஹேப்பி தீபாவளி மக்களே!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications