சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் நிலவுக்கு செல்லும் அமெரிக்கா? நாசா களமிறக்கிய "ஓரியான் கேப்ஸ்யூல்".. செம விண்வெளி திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களில் நாசா மீண்டும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இதற்காக புதிய மிஷன் ஒன்றில் நாசா பணியாற்றி வருகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இப்போதெல்லாம் பெரிதாக விண்வெளி திட்டங்களில் கவனம் செலுத்துவது கிடையாது. சாட்டிலைட்டுகளை அனுப்புவதை தவிர பெரிய திட்டங்கள் எதிலும் நாசா கவனம் செலுத்தவில்லை. மாறாக தங்கள் திட்டங்களை நாசா தனியார் நிறுவனங்கள் மூலம் நிறைவேற்றி வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ், ப்ளு ஆர்ஜின் போன்ற நிறுவனங்கள் மூலமே நாசா தங்களின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு மனிதர்களை அனுப்ப கூட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தயவைத்தான் நாசா நம்பி இருக்கிறது.

நாளை எனக்கு.. நடக்க போகும் இரண்டு முக்கியமான விஷயங்கள்.. ரஜினி பரபரப்பு அறிக்கைநாளை எனக்கு.. நடக்க போகும் இரண்டு முக்கியமான விஷயங்கள்.. ரஜினி பரபரப்பு அறிக்கை

நாசா

நாசா

இந்த நிலையில்தான் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களில் நாசா மீண்டும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக நாசா தற்போது ஆள் இல்லாத கேப்ஸ்யூல் ஒன்றை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் உள்ளது. வரும் பிப்ரவரி 2022ல் இந்த ஆள் இல்லாத ஓரியான் என்று அந்த பெயர் கொண்ட கேப்ஸ்யூலை நாசா விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கிறது.

சுற்றும்

சுற்றும்

இந்த கேப்ஸ்யூலை ராக்கெட்டில் பொருத்தி பல்வேறு சோதனைகளை செய்யும் திட்டத்தில் நாசா உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கடைசி கட்ட சோதனைகளை செய்து வருகிறோம். இந்த திட்டத்திற்கு ஆர்டேமிஸ் 1 மிஷன் என்று பெயர் வைத்து இருக்கிறோம். இது நிலவுக்கு செல்லும் முதல் கட்ட திட்டம் ஆகும்.

ராக்கெட்

ராக்கெட்

322 அடி உயர ராக்கெட்டின் கூம்பில் இந்த கேப்ஸ்யூல் இருக்கும். இது நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வரும். இதை நிலவின் வட்டப்பாதையில் சரியாக நிலை நிறுத்துவதன் மூலம் அடுத்தகட்ட மிஷன்களை நாங்கள் மேற்கொள்வோம். இந்த மிஷன் வெற்றிபெறும் பட்சத்தில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் மிஷனில் கவனம் செலுத்துவோம், என்று நாசா தெரிவித்துள்ளது.

நாசா திட்டம்

நாசா திட்டம்

அதாவது எதிர்காலத்தில் மீண்டும் நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதற்கு வசதியாக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஜூலை 16, 1969ல் முதல்முறையாக மனிதர்களை வெற்றிகரமாக நிலவிற்கு நாசா அனுப்பியது. அதன்பின் 3 வருடங்களில் 12 பேர் வரை அமெரிக்காவில் இருந்து நிலவிற்கு சென்றனர். அதன்பின் 1972க்கு பின் பல்வேறு காரணங்களுக்காக நிலவிற்கு மனிதர்கள் செல்லும் திட்டங்கள் மொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
NASA to focus on moon again: A capsule will reach the orbit next year February.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X