விண்வெளியில் மணமணத்த மீன் குழம்பு.. சர்வதேச ஸ்பேஸ் சென்டரில் சுனிதா வில்லியம்ஸ் செய்த தரமான சம்பவம்
சென்னை: சர்வதேச விண்வெளி மையத்துக்கு 3வது முறையாக வெற்றிக்கரமாக சென்றுள்ள இந்திய வம்சவாளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் எடுத்து சென்ற மீன்குழம்பு பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுனிதா வில்லியம்ஸ். இவர் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த 5ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டது. இந்த விண்கலன் பூமிக்கு மேல் விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணத்தை தொடங்கியது.
27 மணிநேர பயணத்துக்கு பிறகு ஜூன் 6 இரவு 11 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தை அவர் அடைந்தார். விண்வெளிக்கு சென்றதும் சுனிதா வில்லியம்ஸ் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் நடனமாடினார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 7 வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர்.
விண்வெளிக்கு சுனிதா வில்லியம்ஸ் செல்வது இது 3வது முறையாகும். இங்கு அவர்கள் 8 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பிறகு அவர்கள் ஆய்வை முடித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வர உள்ளனர். இந்த பயணத்தின்போது சுனிதா வில்லியம்ஸ் தன்னுடன் மீன்குழம்பு எடுத்து சென்றார். சுனிதா வில்லியம்ஸ் ஒவ்வொரு முறை விண்வெளி பயணம் செய்யும்போது சில பொருட்களை விண்வெளிக்கு எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதற்கு முன்பு அவர் பகவத் கீதை, சமோசா எடுத்து சென்றிருந்தார். அந்த வரிசையில் தற்போது அவர் மீன்குழம்பு மற்றும் விநாயகர் சிலையை எடுத்து சென்றார். இந்த நிலையில் தான் மீன்குழம்பை தன்னுடன் எடுத்து சென்றிருப்பது பற்றி அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அருகே மீன் குழம்பு இருப்பது வீட்டில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications