தடுக்கி விழுந்த நத்தம் விஸ்வநாதன்.. அண்ணே பாத்து..பதறிப்போன அதிமுக நிர்வாகிகள்
வானகரத்தில் பொதுக்குழு ஏற்பாடுகளை பார்வையிட்ட நத்தம் விஸ்வநாதன் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி கல்யாண மண்டபத்தில் பொதுக்குழு ஏற்பாடுகளை பார்வையிட்ட நத்தம் விஸ்வநாதன் தடுமாறி விழுந்தார். தடுமாறி விழுந்த நத்தம் விஸ்வநாதனை அதிமுக நிர்வாகிகள் தூக்கிவிட்டு தண்ணீர் தந்து அமர வைத்தனர்.
Recommended Video
இரட்டை தலைமை விவகாரம் அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் களேபரங்களுடன் நிகழ்ந்தேறியது.

கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமை தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரியும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்து, வழக்கு ஜூலை 11 தள்ளிவைத்தார்.
ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கூறியதோடு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக பொதுக்குழு நடக்கவே நடக்காது என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீ வாரு கல்யாண மண்டபத்தில் மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருடிகன்றன. அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பெஞ்சமின், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நடந்து வந்து கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதன் இரும்பு கம்பி தடுக்கி கால் தடுமாறி கீழே விழுந்தார். அதைப்பார்த்த அதிமுக நிர்வாகிகள் பதறிப்போயினர். அவரை எழுப்பி ததண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.
கட்சியின் மூத்த நிர்வாகியான நத்தம் விஸ்வநாதன் தடுமாறி விழுந்த சம்பவம் வானகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications