மாதம் ரூ.40,000 டூ ரூ.1.40 லட்சம் வரை சம்பளம்.. என்பிசிசியில் சூப்பர் வேலை.. தட்டித்தூக்க ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு துறையின் கட்டுப்பாட்டில் தேசிய கட்டடங்கள் கட்டுமான கழகம் (National Buildings Construction Corporation) செயல்பட்டு வருகிறது. இந்த கழகம் சார்பில் பல்வேறு முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தேசிய கட்டடங்கள் கட்டுமான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

 காலியிடங்கள் எத்தனை?

காலியிடங்கள் எத்தனை?

தேசிய கட்டடங்கள் கட்டுமான கழகத்தில் 4 பிரிவுகளில் மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி சீனியர் ப்ராஜெக்ட் எக்ஸிக்யூட்டிவ் (சிவில்), மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கு(சிவில்) தலா 20 பேர், சீனியர் ப்ராஜெக்ட் எக்ஸிக்யூட்டிவ் (எலக்ட்ரிக்கல்) னேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கு(எலக்ட்ரிக்கல்) பிரிவுக்கு தலா 5 பேர் என மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு என்ன?

கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு என்ன?

பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிஇ/ பிடெக் பிரிவில் சிவில் அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். சீனியர் ப்ராஜெக்ட் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும், மேனேஜ்மென்ட் ட்ரெய்னி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 29 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயதானது 2023 பிப்ரவரி 15ம் தேதியின் அடிப்படையில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

 மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?


பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விண்ணப்ப கட்டணம் என்பது தனித்தனியே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனியர் ப்ராஜெக்ட் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு ரூ.1,000, மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி மற்றும் துறையை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2023 ஜனவரி 15ம் தேதிக்குள் https://www.nbccindia.com/webEnglish/jobs இணையதளம் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வார் Computer Based Test மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணி தொடர்பாக கூடுதல் விபரங்கள் அறிய Click Here

ஆன்லைனில் பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+