நிஜமான “பிகில்”.. பஞ்சாபில் சாதித்த சிங்கத் தமிழச்சிகள்! சிஎம் ஸ்டாலின், உதயநிதியுடன் குரூப் போட்டோ
சென்னை: தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27 வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், சந்தித்து, கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டி, பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்தரில் ஜூன் 12 முதல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் விளையாடிய தமிழ்நாடு அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர் 26.6.2023 அன்று நடைபெற்ற இரயில்வே அணிக்கு எதிரான அரையிறுதியில், தமிழ்நாடு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சீனியர் பெண்கள் கால்பந்து அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, 28.6.2023 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணியை வென்று முதலிடம் பெற்று தங்கப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் டி.தேவி. என்.சௌமியா, பி. தனலட்சுமி, எஸ்.கௌசல்யா, என்.லாவண்யா, எம்.பவித்ரா, பி.துர்கா, எஸ்.சண்முகப்பிரியா, எம்.சுபாஷிணி, எம். பரமேஸ்வரி, எஸ். பிரியதர்ஷினி, எம்.மாளவிகா, எம்.நந்தினி, ஏ. கார்த்திகா, கே. இந்துமதி, ஆர். வினோதினி. எஸ். ஐஸ்வர்யா, ஆர். சந்தியா, பி.சந்தியா, எஸ். சண்முகப்பிரியா, ஆர். யுவராணி. என். அம்சவள்ளி மற்றும் பயிற்சியாளர்கள் எஸ். கோகிலா மற்றும் வி.கலா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த அணியில் உள்ள 12 வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டியில் முதலிடம் பெற்று தங்க கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
இதுதான் நம்பிக்கை! 5.3 லட்சம் மனிதர்களின் ஒற்றைக் கனவு! ஸ்பெயினின் திமிரை உடைத்த 40 வயது 'கிழவன்' -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications