Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹர் ஹர் மோடி.." சட்டென இந்தியில் கோஷம் எழுப்பிய நயினார்.. ஒரு செகண்ட் அமைதியான கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்டிஏ கூட்டணி இன்றைய தினம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் மேடையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திடீரென இந்தியில் கோஷம் எழுப்பினார். முதலில் அவர் தமிழில் கோஷம் எழுப்பிய போது தொண்டர்கள் ஆர்வமாகக் கரகோஷம் செய்த நிலையில், சட்டென இந்தியில் கோஷம் வந்ததால் ஒரு நொடி அமைதியாகிவிட்டனர்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்றைய தினம் மதுராந்தகத்தில் என்டிஏ சார்பில் பிரம்மாண்டக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாக ஜிகே வாசன் உள்ளிட்டோர் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

PM Modi Tamil Nadu Chennai

இந்தியில் கோஷம்

முதலில் மேடை ஏறிய அதிமுகவின் கே பி முனுசாமி கூட்டத்தை வரவேற்பு பேசினார். அதன் பிறகு மேடை ஏறிய நயினார் நாகேந்திரன், மக்களைப் பார்த்து நான் சொல்லும் கோஷத்தைத் திருப்பிச் சொல்லுங்கள் எனச் சொல்லிப் பேச ஆரம்பித்தார். முதலில் "வெல்லும் கூட்டணி.. என்டிஏ கூட்டணி..", "மோடி எடப்பாடி கூட்டணி தமிழனைக் காக்கும் கூட்டணி, தமிழனை காக்கும் கூட்டணி" என்று சொன்னார்.

பிறகு சட்டென இந்தியில் ஹர் ஹர் மோடி, ஹமாரா மோடி, ஹமேச மோடி என்று இந்தியில் கோஷத்தை எழுப்பினார். சட்டென இந்தியில் கோஷம் வந்ததால் அங்குக் கூடியிருந்தவர்கள் ஒரு நொடி குழம்பிப் போனார்கள். இருந்தாலும், ஒரு செகன்ட் கேப்பிற்கு பிறகு அவர்களும் அதே கோஷத்தை மீண்டும் எழுப்பினர். அதைத் தொடர்ந்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லி தனது உரையை நயினார் நாகேந்திரன் ஆரம்பித்தார்.

நயினார் நாகேந்திரன்

அப்போது பேசிய அவர், "ஏரி காத்த ராமன் இடத்தில் தமிழனை காக்க, தமிழனை மீட்கப் பிரதமர் மோடி இந்தத் தேசிய கூட்டணியை உருவாக்கி இங்கு வருகை தந்திருக்கிறார். இது பொதுக்கூட்டம் அல்ல.. இது ஒரு மாநாடு.. இந்தக் கூட்டம் சென்னை சட்டமன்றத்திலே பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கேயே கூடுகிற கூட்டம் அவர்களின் ஆட்டத்தை முடிப்பதற்கான கூட்டம்" என்றார்.

சூரியன் மறைந்து போனது

மாநாடு நடைபெறும் மதுராந்தகத்தில் சாரல் மழை பெய்யும் நிலையில், வானம் மேகமூட்டத்தோடு இருந்தது. அதைக் குறிப்பிடும் வகையில், "இந்த நேரத்தில் மனம் வீசுகின்ற மலர்கள் பல இருக்கும் ஒரு மாலை போல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினுடைய தலைவர்களாக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதற்கு வானமே வாழ்த்திக் கொண்டிருக்கிறது. சூரியன் எங்குமே இல்லை.. சூரியன் மறைந்து போனது.. மோடி சென்னைக்கு வருகிறார்கள் என்றதும் சூரியன் மறைந்து போனது. தேசிய ஜனநாயகக் கூட்டம் இங்கே நடைபெறுகிறது.. சூரியன் இல்லாமல் போய்விட்டது" என்றார்.

அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம்.. நிச்சயமாக ஆட்சி மாற்றம் உறுதி! அதற்கான வேலைகளைப் பிரதமர் நரேந்திர மோடியும் எடப்பாடி பழனிசாமியும் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றிலிருந்து அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து தேசிய ஜனநாயக ஆட்சி மலர வேண்டும்.

திருப்பரங்குன்ற விவகாரம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை.. சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்கிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் முடிவு கட்டும் நாள் வந்துவிட்டது. உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் நோக்கம்.. மக்களுக்கு மீது எந்தவொரு அக்கறையும் இல்லை.. மக்கள் மீது அக்கரை கொண்ட தலைவர் நரேந்திர மோடி! அவர் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்குத் தந்திருக்கிறார்.. 11 வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்திற்குத் தந்திருக்கிறார்கள். இந்த 11 ஆண்டுகளில் 14 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்குத் தந்த தலைவர் நரேந்திர மோடி!" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+