Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்திய.. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்! மக்களின் பொருளாதாரமே மாறப்போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) பிரதமர் மோடி அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. இந்தியாவில் ஓய்வூதியம் பெறக்கூடிய மத்திய அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து கவலைகளை தெரிவித்து வந்த நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி உள்ளது.

பொருளாதார பாதுகாப்பை உறுதியளிக்கும் வகையில், முந்தைய திட்டங்களின் ஆபத்துக்களைத் தவிர்க்கும் விதமாக, முறையான திட்டமிடலுடன் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. முக்கியமாக மத்திய அரசு ஊழியர்களின் நலன்களை மனதில் வைத்து , நீண்டகால நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. யுபிஎஸ்ஸின் பின்னணியில் உள்ள பயன்கள்.. பழைய ஓய்வூதியத் திட்டங்களிலிருந்து அதன் வேறுபாடுகள் .. இது மக்கள் இடையே எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இங்கே பார்க்கலாம்.

jobs job old pension scheme pension

பொருளாதாரத்தை உயர்த்த கூடிய ஓய்வூதியம்:

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது இந்தியாவில் வலுவான ஓய்வூதிய திட்டமாக உருவெடுத்து உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், மக்கள் இடையே வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்கு தீர்வாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி முன்வைத்த பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) போலல்லாமல்.. இந்த UPS திட்டம் முறையாக திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த காலத்தில் மாநில அரசாங்கங்களை. அரசு ஊழியர்களை பாதித்த நிதி பேரழிவுகளை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் அதாவது OPS, பல்வேறு மாநில அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்டது, இறுதியில் இந்த திட்டம் காரணமாக அந்த மாநிலங்கள் நிதி திவால்நிலைக்கு செல்ல வழிவகுத்தது. மாநிலங்கள் தங்கள் நிர்வாக செலவுகளை, திட்டங்களை நிறைவேற்ற கடுமையாக போராடியது.

OPS திட்டம் காரணமாக மாநிலங்களுக்கு கடுமையான நிதி சுமை ஏற்பட்டது. இதனால் அரசாங்கத்தின் மீது பெரும் நிதிச்சுமை ஏற்பட்டது. காலப்போக்கில், 1980கள், 1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களை நினைவூட்டும் வகையில், மாநில அரசாங்கங்கள் கடுமையான நிதிச்சுமைக்கு சென்றது. ஊழியர்களின் சம்பளம், சமூக நலத் திட்டங்களுக்கு செலவு செய்வது அல்லது உள்கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்வதில் பழைய ஓய்வூதிய திட்டம் காரணமாக கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டன.

மாறாக, யுபிஎஸ் திட்டமானது முறையான பொருளாதாரக் திட்டமிடலுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளை திவால்நிலையை நோக்கித் தள்ளாமல் ஓய்வூதியங்கள் பாதுகாப்பாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் வகையில் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியம் உருவாக்கப்பட்டது. UPS ஆனது OPS மூலம் ஏற்பட்ட நிதிச்சுமையை மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதன்மூலம் பென்ஷனும் கொடுக்க முடியும், அதே சமயம் ஊழியர்களின் சம்பளம், சமூக நலத் திட்டங்களுக்கு செலவு செய்வது அல்லது உள்கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்வதில் கவனமும் செலுத்த முடியும்.

விமர்சனங்களை கையாளுதல்: இது யு-டர்ன் அல்ல, சரியான முடிவு!

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை சிலர் விமர்சனம் செய்கின்றனர். அதாவது புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு வந்த விமர்சனம் காரணமாக பழைய ஓய்வூதியம் போலவே இருக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது. பாஜக பின்வாங்கிவிட்டது என்று காங்கிரஸ் விமர்சனங்களை வைக்கிறது. UPS இல் உள்ள 'U' என்பது அரசாங்கத்தின் 'U-turn' என்று முத்திரை குத்தியுள்ளது.

இருப்பினும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விமர்சனங்களை மறுத்துள்ளார். யுபிஎஸ் என்பது தேசிய ஓய்வூதிய முறையை (என்பிஎஸ்) திரும்பப் பெறுவது அல்லது ஓபிஎஸ்க்கு திரும்புவது அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார். மாறாக ஊழியர்களின் கருத்து மற்றும் தேவைகளுக்கு செவி மடுத்து அதன்படி முறையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

சீதாராமன் விளக்கியது போல், OPS முறைக்கு முழுமையாக மத்திய அரசு திரும்பவில்லை .. மாறாக புதிய திட்டம் OPS மற்றும் NPS இரண்டின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஊழியர்களின் நலன்கள் மற்றும் அரசாங்கத்தின் நிதி ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்தும் ஒரு நடுநிலை திட்டமாக இந்த ஓய்வூதிய திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. யுபிஎஸ் அதன் கட்டமைப்பு மற்றும் நோக்கங்களில் வேறுபட்டது. அதனால்தான் அதற்கு புதிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இது பழைய திட்டம் அல்ல.. முழுக்க முழுக்க புதிய கொள்கை கொண்ட புது திட்டமிடல்.

UPS என்றால் என்ன, அது ஏன் இந்தியாவிற்கு முக்கியமானது?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் இந்தியாவைப் போன்ற பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு சேவை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிதிப் பொறுப்புகள் நிர்வகிக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதியத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நீண்ட கால நிலைத்தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் நிலையான ஓய்வூதியத்திற்கு மட்டும் உத்தரவாதம் அளித்த OPS அல்லது NPS போல அல்லாமல் முறையான திட்டமிடலுடன் UPS உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் பரந்த மற்றும் பலதரப்பட்ட மக்கள்தொகை கொண்ட நிலப்பரப்புக்கு நெகிழ்வான மற்றும் நம்பகமான ஓய்வூதிய திட்டம் தேவைப்படுகிறது. UPS ஆனது வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு, ஓய்வு பெற்றவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சமூக நலத் தேவைகளை நிவர்த்தி செய்யும் அதே வேளையில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

நிறைவேற்றப்படும் பொதுநலத்திட்டம்: பொருளாதார திட்டம்

யுபிஎஸ் அறிமுகமானது, பல ஆண்டுகளாக மோடி அரசாங்கம் செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களின் பரந்த கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) போன்ற திட்டங்கள், வங்கி இல்லாதவர்களுக்கு வங்கி வசதியை எளிதாக வழங்குவதை உறுதி செய்தது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), இது ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடுகள் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது; மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்குகிறது. இவை அனைத்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கு ஆதரவளிக்கும் சிறந்த திட்டங்கள் ஆகும்.

அப்படித்தான் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. குடிமக்களுக்கு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான வசதிகளை, பொருளாதாரத்தை வழங்கும் வகையில்.. அதே சமயம் அரசுக்கு பொருளாதார ரீதியான சுமையை ஏற்படுத்தாத வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+