சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30 வருடமாக மாறவில்லை.. உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு.. ராமதாஸ் கோரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டின் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 15% மட்டுமே எஸ்.சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளை சார்ந்தவர்களாக உள்ளதாக மத்திய அரசின் சட்டத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கவலை தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2018 முதல் 2022 வரை நாட்டில் உள்ள உயா்நீதிமன்றங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 537 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 சதவிகிதம் பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். அதேபோல் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்கள் 1.3 சதவிகிதம் பேர் மட்டுமே நியமினம் செய்யப்பட்டுள்ளனர்.

Need Reservation in the appointment of Supreme Court and High Court judges Request PMK Founder Ramadoss

பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் 2.8 சதவிகிதமும், 11 சதவிகிதம் நீதிபதிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களாகவும், சிறுபான்மை சமூகங்களைச் சோ்ந்த நீதிபதிகள் 2.6 சதவிகிமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகளை நியமிப்பதற்கான முதன்மைப் பொறுப்பை கொலீஜியம் அமைப்பு ஏற்று 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகங்களையும் சோ்ந்தவா்களுக்கு இன்னும் சமவாய்ப்பு கிடைக்கவில்லை. நீதிமன்றங்களில் சமூகப் பன்முகத்தன்மை நிலவுவது தொடா்ந்து தாமதமடைந்து வருகிறது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "சென்னை உயர் நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 15% மட்டுமே பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர்) வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசின் சட்டத்துறை கூறியிருப்பது கவலையளிக்கிறது.

கொரோனா 4வது அலை அபாயம்.. இப்போது செவிலியர் பணி நீக்கமா? உயிரை கொடுத்து வேலை செஞ்சாங்களே - ராமதாஸ் கொரோனா 4வது அலை அபாயம்.. இப்போது செவிலியர் பணி நீக்கமா? உயிரை கொடுத்து வேலை செஞ்சாங்களே - ராமதாஸ்

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை பரிந்துரைக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு வழங்கப்பட்டு முப்பதாண்டுகளுக்கு மேலாகியும் நீதிபதிகள் நியமனம் சமூகப் பன்முகத்தன்மையும், உள்ளடக்கிய தன்மையும் கொண்டதாக மாறவில்லை என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் நீதிபதி பதவிக்கு தகுதியானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியும் கூட எந்த மாற்றமும் நிகழவில்லை. அறிவுரைகள் ஏற்கப்படவில்லை என்றால் சட்டம் இயற்றுவது தான் ஒரே தீர்வு.

எனவே, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த தகுதியும், திறமையும் கொண்டவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
According to the Central Government's Law Department, only 15% of the judges appointed in the last 5 years in all the High Courts of the country belong to SC, ST, OBC and minority classes. PMK founder Ramadoss expressed his concern about this and insisted that reservation should be introduced in the appointment of Supreme Court and High Court judges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X