சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் தேர்வு... மையங்கள் ரெடி.. ஆடை முதல் ஆவணம் வரை.. மாணவர்களே முழு விவரம் இதோ!!

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை நாடு முழுவதும் நடக்கிறது. கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வு கொரோனா முடக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நாளை நடக்கிறது. தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலும் இருந்து எழுந்த எதிர்ப்பையும் மீறி நாளை தேர்வு நடக்கிறது.

இதன்படி நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடக்கவுள்ளது. நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15,97,433 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 238 தேர்வு மையங்களில் 1,17,990 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். ஏற்கனவே ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சிலருக்கு தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால், மாணவர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில், வேலூரில் 2 தேர்வு மையங்கள் மாற்றப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், இந்த தகவலை குறுஞ்செய்தி வாயிலாக வாட்ஸ் அப்களுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

என்னை மன்னித்துவிடுங்கள்.. நான் கோழை.. சோர்வடைந்துவிட்டேன்.. மதுரை மாணவி தற்கொலை கடிதம் என்னை மன்னித்துவிடுங்கள்.. நான் கோழை.. சோர்வடைந்துவிட்டேன்.. மதுரை மாணவி தற்கொலை கடிதம்

கையுறை

கையுறை

  • மாஸ்க், கையுறை, முகத்தை மறைக்கும் ஷீல்ட்.
  • லூசான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். ஜீன்ஸ், சல்வார், நீளமான ஸ்கர்ட், டிரவுசர், டி சர்ட்ஸ், சர்ட் ஆகியவற்றை அணிந்து வரலாம்
  • முழுக்கை சட்டை, பெரிய பட்டன் கொண்ட சட்டைகள், அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணியக் கூடாது. கட்டாயம் ஷூ அணிந்து வரக் கூடாது. செருப்பு அணிந்து வரலாம்
  • நகைகளை அணிந்து வரக் கூடாது. மதம் சார்ந்த நகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • தலையில் ஸ்கார்ப் மற்றும் தலைப்பாகை அணிந்து வரலாம், ஆனால், பரிசோதிக்கப்படுவார்கள்.
  • வாட்ச் எந்த காரணம் கொண்டும் அணிந்து வரக் கூடாது.
தண்ணீர் பாட்டில்

தண்ணீர் பாட்டில்

  • ஹால் டிக்கெட் எடுத்து வர வேண்டும். அரசு வெளியிட்டு இருக்கும் போட்டோ ஐடி கார்டு, PwD சான்றிதழ் கட்டாயம் எடுத்து வரவேண்டும்.
  • பால் பாயின்ட் பென் தான் கொண்டு வரவேண்டும்.
  • செல்போன், புளூடூத், இதுபோன்ற தகவல்களை பரிமாறும் வேறு எந்த சாதனங்களையும் எடுத்து வரக் கூடாது.
  • தண்ணீர் பாட்டில் கொண்டு வரலாம். ஊடுருவல் போன்றதாக பாட்டில் இருக்க வேண்டும். சானிடைசர் கொண்டு வரலாம். தேர்வு மையங்களில் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டு இருக்காது.
  • பைகள், சிறுதீனிகள், புத்தகம், பிரின்ட் எடுக்கப்பட்ட பேப்பர்கள், கொண்டு வரக்கூடாது.
  • எந்தக் காரணம் கொண்டும் கைநாட்டு ஹால் டிக்கெட்டில் வைத்து இருக்கக் கூடாது.
தனியாக அமர வேண்டும்

தனியாக அமர வேண்டும்

தேர்வு மையங்களுக்குள் செல்வதற்கு முன்பாக உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும். 99.4 டிகிரிக்கு மேல் இருந்தால், 20 நிமிடம் தனியாக அமர வைக்கப்படுவார்கள். அதன் பின்னரும் உடல் வெப்பநிலை குறையவில்லை என்றால் தனி அறையில் வைத்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

Recommended Video

    NEET Exam: தமிழக மாணவர்களின் சதவீதம் சரிவு
    தேர்வு அறை

    தேர்வு அறை

    தேர்வு முடிந்ததும், ஹால் டிக்கெட்டில் கேட்டு இருக்கும் விவரங்களை சரியாக பூர்த்திசெய்து, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வு எழுத வரும் மாணவர்கள் கண்டிப்பாக சமூக மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

    English summary
    NEET 2020: Need to check dress code, documents and items allowed at exam centre
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X