சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு மதிப்பெண் வழக்கு.. அசல் விடைத்தாளை காட்டுங்க.. என்டிஏ-வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: நீட்தேர்வு மதிப்பெண் குறைபாடு தொடர்பாக மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில், அசல் விடைத்தாளை காண்பிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NEET exam score deficiency case - Madras HC directs NTA to show original answer sheet

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதனையடுத்து, இதனையடுத்து, உத்தேச விடைத்தொகுப்பும், தேர்வரின் OMR விடைத்தாளையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்த OMR செயல்முறையில் ஏதேனும் குறைகள் இருந்தால், தேர்வர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நீட்தேர்வு மதிப்பெண் குறைபாடு தொடர்பாக நீலிகிரி மாணவி ஒருவர் தொடர்ந்த வவழக்கில், அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிறிஸ்மா விக்டோரியா என்கிற மாணவி, சென்னை உயர்நீரிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள், ஜூலை 31ஆம் தேதி வெளியிடபட்டது. அதில் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலில், 65 மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

யார் பாருங்க.. போயும் போயும் எருமை மாட்டுக்கு முன்னாடி.. அதுவும் தண்ணி தொட்டிக்குள்ளே.. ஆமா, அதென்ன?யார் பாருங்க.. போயும் போயும் எருமை மாட்டுக்கு முன்னாடி.. அதுவும் தண்ணி தொட்டிக்குள்ளே.. ஆமா, அதென்ன?

எனவே, தனது விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் மாணவி கிறிஸ்மா விக்டோரியா கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ள மனுதாரர், நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு வந்தால், விடைத்தாளை சரிபார்ப்பதற்காக காண்பிக்க தயாராக இருப்பதாக தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையில் விடைத்தாளை காண்பிப்பதற்கான தேதியை, 10 நாட்களில் நிர்ணயித்து, மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார்.

மேலும், அந்த தேதியில் நொய்டா வரும் அந்த மாணவிக்கு, அவரது சந்தேகம் தீரும் வகையில், அசல் விடைத்தாளை காண்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

English summary
The Madras High Court has ordered the National Testing Agency to show the original answer sheet in the case of deficient marks in the NEET examination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X